Close Menu
    What's Hot

    டெல்லி வன்முறை: 17-ம் தேதியே எச்சரித்த அமெரிக்கா… எப்படி சாத்தியமானது?

    மாணவர்களை பகடைக் காய்களாக பயன்படுத்துகிறது காங்., கட்சி..!! தர்மேந்திர பிரதான் பகீர் குற்றச்சாட்டு..!!

    நாளை நடிகர் சூர்யாவுக்கு ஹேப்பி பர்த்டே..!! முருகன் கோயிலில் வெள்ளித்தேர் இழுத்த ரசிகர்கள்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பெற்றோர்களே உஷார்!. தண்ணீர் வாளியில் மூழ்கி ஒரு வயது குழந்தை பலி!. குமரியில் சோகம்!
    Featured

    பெற்றோர்களே உஷார்!. தண்ணீர் வாளியில் மூழ்கி ஒரு வயது குழந்தை பலி!. குமரியில் சோகம்!

    Editor web3By Editor web3May 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kumari child dead
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கன்னியாகுமரியில் தண்ணீர் நிரப்பிய பக்கெட்டில் தவறி விழுந்த ஒரு வயது ஆண் குழந்தை, மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்த சூழால் பகுதியைச் சேர்ந்தவர் சுனில். கூலித் தொழிலாளியான இவருக்கு ஆஷா என்ற மனைவியும், தர்வின் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் இருந்தனர். நேற்று வழக்கம் போல சுனில் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், ஆஷா வீட்டில் சமையல் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது, இவர்களது குழந்தை தர்வின் வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

    அப்பகுதியில் துணி துவைப்பதற்காகப் பெரிய வாளி ஒன்றில் நிறையத் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தர்வின், எதிர்பாராத விதமாகத் தண்ணீர் வாளியின் உள்ளே தலைகீழாகத் தவறி விழுந்துள்ளான்.

    சமையல் வேலைகளை முடித்துவிட்டு வெளியே வந்த தாய் ஆஷா, தன் குழந்தை தண்ணீருக்குள் மூழ்கியிருப்பதை கண்டு உறைந்து போய் அலறியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், குழந்தையை மீட்டு உடனடியாக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கைவிரித்தனர்.

    இந்தத் துயரச் சம்பவம் குறித்து மார்த்தாண்டம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர் திருவிழா-   தேர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு
    Next Article உள்ளாட்சி தேர்தல்… திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா?
    Editor web3
    • Website

    Related Posts

    டெல்லி வன்முறை: 17-ம் தேதியே எச்சரித்த அமெரிக்கா… எப்படி சாத்தியமானது?

    July 22, 2026

    மாணவர்களை பகடைக் காய்களாக பயன்படுத்துகிறது காங்., கட்சி..!! தர்மேந்திர பிரதான் பகீர் குற்றச்சாட்டு..!!

    July 22, 2026

    நாளை நடிகர் சூர்யாவுக்கு ஹேப்பி பர்த்டே..!! முருகன் கோயிலில் வெள்ளித்தேர் இழுத்த ரசிகர்கள்..!!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டெல்லி வன்முறை: 17-ம் தேதியே எச்சரித்த அமெரிக்கா… எப்படி சாத்தியமானது?

    மாணவர்களை பகடைக் காய்களாக பயன்படுத்துகிறது காங்., கட்சி..!! தர்மேந்திர பிரதான் பகீர் குற்றச்சாட்டு..!!

    நாளை நடிகர் சூர்யாவுக்கு ஹேப்பி பர்த்டே..!! முருகன் கோயிலில் வெள்ளித்தேர் இழுத்த ரசிகர்கள்..!!

    மறைமுக ஏலத்தில் பருத்தி விற்பனை அமோகம்..!! திருவாரூர் விவசாயிகள் மகிழ்ச்சி..!!

    சிக்கிம் சுரங்கப்பாதை விபத்து.. பலி எண்ணிக்கை 20-ஆக உயர்வு..!! மீட்புப் பணிகள் தீவிரம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.