தற்போது முடிந்த தேர்தலில் தவெகவுக்கு செல்லத்தான் அதிமுக எம்எல்ஏ-க்களை சி.வி.சண்முகத்தின் சகோதரர் சி.வி.ராதாகிருஷ்ணன் புதுவையில் தங்க வைத்ததாகவும். ஆனால் பழியை பொதுச்செயலாளர் பழனிச்சாமி மீது போட்டதாகவும் விழுப்புரம் அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கும் சி.வி. சண்முகம் தரப்புக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நடைபெறும் நிலையில் இரு தரப்பும் மாறி மாறி ஒருவரையொருவர் கடுமையாக சொற்களால் தாக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, விழுப்புரம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி அதிமுக தலைமை அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது…
சி.வி.சண்முகம் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்ற நிலையில் , தொடர்ந்து அவரின் ஆதரவாளர்களை ஏவி கட்சிக்கு எதிராக செயல்படுகிறார்.
சி.வி.சண்முகத்துக்கு தற்போது இவ்வளவு சொத்து எப்படி வந்தது?
காஜா வைத்து பிழைப்பு நடத்திய அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபுக்கு ரூ.100 கோடிக்கு சொத்து வந்தது எப்படி?
சி.வி.சண்முகத்தின் பினாமி தான் சுரேஷ்பாபு.
அதிமுக வில் 3 முறை அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் கொள்ளை அடித்த பணத்தை வைத்துக்கொண்டு அவரின் அண்ணன் துபாயில் மால் கட்டுக்கிறார்.
அவரின் மற்றொரு தம்பிக்கு 100 பஸ் ஓடுகிறது. இது எல்லாமே கொள்ளை அடித்த பணம் தான்.
சி.வி. சண்முகம் குடியிருக்கும் வார்டில் ஒரு முறைகூட அதிமுக தேர்தலில் முன்னிலை பெற்றது கிடையாது.
தற்போது முடிந்த தேர்தலில் த.வெ.க விற்கு செல்லதான் அதிமுக எம்.எல்.ஏ க்களை சி.வி.சண்முகத்தின் சகோதரர் சி.வி ராதாகிருஷ்ணன் புதுவையில் தங்க வைத்தார். ஆனால் பழியை பொதுச்செயலாளர் பழனிசாமி மீது போட்டனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

