Close Menu
    What's Hot

    போராட்டத்தில் தலைமைக் காவலர் –  தலைமைச் செயலகம் வெளியே போலீசார் இடையே தள்ளுமுள்ளு

    அமைச்சரவையில் விசிக? – திருமாவின் திடீர் நிலைப்பாடும் பின்னணி சிக்கல்களும்

    கொல்லைப்புற வழியில் முதலமைச்சராகத் துடித்தார் எடப்பாடி பழனிசாமி…!!  ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»நாடு முழுவதும் அடைக்கப்பட்ட மருந்து கடைகள்..! 12.4லட்சம் மருந்தக உரிமையாளர்கள் பங்கேற்பு..!
    Featured

    நாடு முழுவதும் அடைக்கப்பட்ட மருந்து கடைகள்..! 12.4லட்சம் மருந்தக உரிமையாளர்கள் பங்கேற்பு..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 20, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 15
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மருந்து கடை உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

    ஆன்லைன் மருந்து விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை ஆன்லைன் மூலம் அடிமையாகும். இளம் தலைமுறையை காக்க வேண்டும். உயிர் காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்கள், அதிக தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்த வேண்டும்.

    போலி மருந்து விற்பனையை தடுக்க வேண்டும். ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் கலச்சார சீரழிவை தடுத்து நிறுத்த வேண்டும். மின் மருந்தகச் செயல்பாடுகள் தொடர்பான அரசாணைகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்தது.

    அதன்படி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை நடக்கும் வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் சுமார் 12.4லட்சம் மருந்தக உரிமையாளர்கள் பங்கேற்பதால், மருந்து கடைகளும் அடைக்கப்படுகின்றன. அதேப்போல சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 5,000 மருந்தகங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் உரிமம் பெற்ற சுமார் 42,000க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

    இதனால் மருந்து விநியோகம் பாதிக்கப்பட்டு, மருந்தகங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இத்தொழிலை நம்பியுள்ள சுமார் 5கோடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

    நோயாளிகளுக்கான அவசர மருந்து சேவையை உறுதிப்படுத்த தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு இயக்கத்தின் சார்பில் உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருந்து கட்டுப்பாடு இயக்கத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆய்வாளர்களை தொடர்பு கொண்டு தேவையான அவசர மருந்துகளை பெறலாம்.

    பிரதமர் மருந்தகங்களும், தமிழ்நாடு அரசு சார்பில் மானிய விலையில் தரமான மருந்துகளை வழங்க கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் ”முதல்வர் மருந்தகங்கள்” வழக்கம் போல் செயல்படும். வேலை நிறுத்தம் நடந்தாலும் அவசர கால மருந்துகள் தடையின்றி கிடைக்க ஏற்பாட் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!
    Next Article 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு..! 94.31% மாணவர்கள் தேர்ச்சி..!
    Editor TN Talks

    Related Posts

    அமைச்சரவையில் விசிக? – திருமாவின் திடீர் நிலைப்பாடும் பின்னணி சிக்கல்களும்

    May 20, 2026

    கொல்லைப்புற வழியில் முதலமைச்சராகத் துடித்தார் எடப்பாடி பழனிசாமி…!!  ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு..!!

    May 20, 2026

    பெண்களுக்கு இலவசப் பயணமா? கூடவே கூடாது..! தனியார் பேருந்து உரிமையாளர்கள் குமுறல்..!

    May 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போராட்டத்தில் தலைமைக் காவலர் –  தலைமைச் செயலகம் வெளியே போலீசார் இடையே தள்ளுமுள்ளு

    அமைச்சரவையில் விசிக? – திருமாவின் திடீர் நிலைப்பாடும் பின்னணி சிக்கல்களும்

    கொல்லைப்புற வழியில் முதலமைச்சராகத் துடித்தார் எடப்பாடி பழனிசாமி…!!  ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு..!!

    பெண்களுக்கு இலவசப் பயணமா? கூடவே கூடாது..! தனியார் பேருந்து உரிமையாளர்கள் குமுறல்..!

    அயோத்திதாசர் வழியில் பயணிப்போம் – மு.க.ஸ்டாலின் அழைப்பு

    Trending Posts

    அமைச்சரவையில் சேர விஜய் அழைப்பு – விரைவில் முடிவு எடுக்கப்படும் – திருமாவளவன்

    May 20, 2026

    கொல்லைப்புற வழியில் முதலமைச்சராகத் துடித்தார் எடப்பாடி பழனிசாமி…!!  ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு..!!

    May 20, 2026

    பெண்களுக்கு இலவசப் பயணமா? கூடவே கூடாது..! தனியார் பேருந்து உரிமையாளர்கள் குமுறல்..!

    May 20, 2026

    நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறதா தவெக அமைச்சரவை? இன்று இரவு சென்னை வருகிறார் ஆளுநர் அர்லேகர்..!!

    May 20, 2026

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு..! 94.31% மாணவர்கள் தேர்ச்சி..!

    May 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.