உலக்க கோப்பை கால்பந்து தொடரானது கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டி அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் மைதானத்தில் நடைபெற்றது. இதில், கடந்தாண்டு சாம்பியனான அர்ஜெண்டினாவும், ஸ்பெயின் அணியும் மோதின. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்பெயின் அணி, 1-0 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவை தோற்கடித்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இவர்களுக்கான சாம்பியன் பட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் வழங்கினார். இந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாததால், கண்ணீருடன் விடைபெற்றார் அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி. உலகக்கோப்பையில் மெஸ்ஸியின் கடைசிப் போட்டியாகக் இது கருதப்படுகிறது. இந்த தொடரில் ரன்னர்-அப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்ட பின், மைதானத்திலேயே மெஸ்ஸி கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் அர்ஜெண்டினா கால்பந்து கூட்டமைப்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் மெஸ்ஸிக்காக ஒரு நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளது. அதில், ”எங்கள் கேப்டனே, உங்களுடைய கண்ணீர் எங்களின் கண்ணீர்! எங்கள் வாழ்நாளின் மிகச்சிறந்த மகிழ்ச்சியை நீங்கள் எங்களுக்கு வழங்கியுள்ளீர்கள்.

உங்களது அர்ப்பணிப்பிற்கும், மாயாஜால ஆட்டத்திற்கும், கடைசி நொடி வரை நீங்கள் கொடுத்த ஒட்டுமொத்த உழைப்பிற்கும் நன்றி. உங்களை நாங்கள் எப்போதும் நேசிக்கிறோம் லியோ!” என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளது.
இறுதிப்போட்டியில் லியோனல் மெஸ்ஸி கோல் எதுவும் அடிக்காத நிலையில், பிரான்ஸ் அணி கேப்டன் எம்பாப்பே தனது இரண்டாவது ‘கோல்டன் பூட்’ விருதை வென்றார்.

இதன் மூலம், ஒன்றுக்கும் மேற்பட்ட உலகக் கோப்பைகளில் அதிக கோல் அடித்த வீரராக திகழும் முதல் வீரர் என்ற பெருமையை இந்த எம்பாப்பே பெற்றார். நான்காவது இடத்தைப் பிடித்த பிரான்ஸ் அணிக்காக எம்பாப்பே மொத்தம் 10 கோல்களையும் நான்கு ‘அசிஸ்ட்’களையும் (கோல் அடிக்க உதவிய வாய்ப்புகள்) பதிவு செய்தார்.

மறுபுறம், தனது கடந்த 12 உலகக் கோப்பை ஆட்டங்களில் முதல் முறையாக கோல் அல்லது ‘அசிஸ்ட்’ எதுவும் இல்லாமல் ஆட்டத்தை முடித்த மெஸ்ஸி, மொத்தம் எட்டு கோல்கள் மற்றும் நான்கு ‘அசிஸ்ட்’களுடன் போட்டியை நிறைவு செய்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version