Close Menu
    What's Hot

    சூடுபிடிக்கும் தூத்துக்குடி லாக்கப் டெத் வழக்கு..!! தொடங்கியது பிரேத பரிசோதனை..!!

    தவெக கோஷ்டி மோதலால் தேனியில் பதற்றம்.. எம்.எல்.ஏ. கார் கண்ணாடி உடைப்பு!

    இந்த ஆண்டிலேயே இலக்கு.. தெருநாய் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு தீவிரம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திடீர் வீடியோ வெளியிட்ட மோடி..!! வினாத்தாள் கசிவை ஒழிக்க மத்திய அரசின் புதிய முயற்சி.. இன்று முக்கிய விவாதம்!
    Featured

    திடீர் வீடியோ வெளியிட்ட மோடி..!! வினாத்தாள் கசிவை ஒழிக்க மத்திய அரசின் புதிய முயற்சி.. இன்று முக்கிய விவாதம்!

    editor5By editor5July 24, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 12 11
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பிரச்னையை முன்வைத்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் தொடர்ந்து தீவிர போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் ஒரு முக்கிய வீடியோவை வெளியிட்டு பெரும் உறுதியுடன் பதிலடி கொடுத்துள்ளார்.

    வினாத்தாள் கசிவு சம்பவம் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ள மனவேதனையை முழுமையாக உணர்ந்துள்ளதாக பிரதமர் கூறினார். “இது சாதாரண விஷயம் அல்ல” என்று வலியுறுத்திய அவர், கடந்த இரண்டரை மாதங்களாக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். குற்றவாளிகள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் கல்வியாண்டு பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்புடன், 22 லட்சம் மாணவர்களுக்கு மறுதேர்வை மிகக் குறுகிய காலத்தில் நடத்த அரசு அனைத்து வளங்களையும் பயன்படுத்தியது. இதன் முடிவுகள் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டு, பல மாணவர்களின் வெற்றிச் செய்திகள் வரும் வண்ணம் உள்ளன.

    இருப்பினும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்த பிரதமர், விரைவு நீதிமன்றங்கள் அமைத்து, கடுமையான தண்டனைகளை உறுதி செய்யும் புதிய சட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளார். இதற்கான வரைவுத் திட்டம் தயாராகி தனது கையில் உள்ளதாக அவர் தெரிவித்தார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது விவாதிக்கப்படும். அமைச்சரவை உறுப்பினர்களின் ஆலோசனைகளுடன் இறுதி செய்யப்பட்டு, வரும் திங்கட்கிழமை தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

    முன்னதாக, வினாத்தாள் கசிவு தொடர்பாக விரைவு நீதிமன்றம் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி ஜந்தர் மந்தரில் ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பல மாணவர் அமைப்புகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. நாளுக்கு நாள் போராட்டம் வீரியம் பெற்று வருகிறது.

    பிரதமரின் இந்த அறிவிப்பு, மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை வழங்கவும் இந்த புதிய சட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

    Narendra Modi NEET paper leak issue
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசூடுபிடிக்கும் மேகதாது விவகாரம்..!! ஆக. 3ம் தேதி தமிழக, கர்நாடக முதல்வர்கள் நேருக்கு நேர் சந்திப்பு!
    Next Article தக்காளி வரத்து அதிகரிப்பு.. விலை கடும் சரிவு..!! சோகத்தில் கிருஷ்ணகிரி விவசாயிகள்..!!
    editor5

    Related Posts

    சூடுபிடிக்கும் தூத்துக்குடி லாக்கப் டெத் வழக்கு..!! தொடங்கியது பிரேத பரிசோதனை..!!

    July 24, 2026

    தவெக கோஷ்டி மோதலால் தேனியில் பதற்றம்.. எம்.எல்.ஏ. கார் கண்ணாடி உடைப்பு!

    July 24, 2026

    இந்த ஆண்டிலேயே இலக்கு.. தெருநாய் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு தீவிரம்..!!

    July 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சூடுபிடிக்கும் தூத்துக்குடி லாக்கப் டெத் வழக்கு..!! தொடங்கியது பிரேத பரிசோதனை..!!

    தவெக கோஷ்டி மோதலால் தேனியில் பதற்றம்.. எம்.எல்.ஏ. கார் கண்ணாடி உடைப்பு!

    இந்த ஆண்டிலேயே இலக்கு.. தெருநாய் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு தீவிரம்..!!

    கவுண்ட்டவுன் தொடக்கம்.. அடுத்த மாதம் வெளியாகிறது ‘வீ த லீடர்ஸ்’ கட்சியின் பெயரும் கொடியும்!

    என் அண்ணா நல்லாத்தான் இருந்தாரு.. போலீஸ் தான் காரணம்..!! அருணாச்சலத்தின் தம்பி பரபரப்பு பேட்டி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.