Close Menu
    What's Hot

    தவெக MLA-வை மிரட்டி பேரம்..!! செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான இருவரை தட்டித்தூக்கிய போலீஸ்..!!

    தனியார் கல்வி நிறுவனங்கள் தொடந்த வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

    மயிலாடுதுறை : காதலர்கள் தற்கொலை விவகாரம்..! பையனின் பெற்றோர் சாலை மறியல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சுயநலமா, வழக்குப் பயமா..?? தவெக-வுக்கு தாவிய அதிமுகவினரை வசைபாடிய பொள்ளாச்சி ஜெயராமன்..!!
    Featured

    சுயநலமா, வழக்குப் பயமா..?? தவெக-வுக்கு தாவிய அதிமுகவினரை வசைபாடிய பொள்ளாச்சி ஜெயராமன்..!!

    editor5By editor5July 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2026 07 01 at 11.31.50 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வழக்குகள் கழுத்தை நெறிப்பதால் கட்சி மாறுகிறார்கள் என தவெகவில் இணையும் அதிமுகவினர் மீது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் பொள்ளாச்சி ஜெயராமன்.

    அதிமுகவை விட்டு வெளியேறி நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தங்கள் சுயநலத்துக்காகவே கட்சி மாறுவதாக அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    சமீப காலமாக அதிமுக-வில் இருந்து பல முக்கிய புள்ளிகள் தவெக-வுக்கு இணைவது அரசியல் வட்டாரத்தில் பேச்சாக உள்ள நிலையில், இது தொடர்பாக கோவையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு பொள்ளாச்சி ஜெயராமன் தனது கருத்தை தெரிவித்தார். அதில், “அதிமுக-வை விட்டுச் செல்பவர்கள் அனைவரும் தங்கள் சுயநலத்துக்காக மட்டுமே மாறுகின்றனர். அவர்கள் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்தல், ஊழல், நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவுமே அவர்கள் புகலிடம் தேடுகின்றனர்” என்று தெரிவித்தார்.

    மேலும், “அதிமுக-விற்கு துரோகம் இழைத்துச் செல்பவர்களின் பின்னணியில் வழக்குப் பயம் மட்டுமே உள்ளது” என அவர் ஓப்பனாகக் குற்றம் சாட்டியுள்ளார். கொங்கு மண்டலத்தில் அதிமுக-வின் அடித்தள வாக்குகளை பெரிதும் நம்பியிருக்கும் சூழலில், இந்தக் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக-வில் இருந்து த.வெ.க-வுக்கு நிர்வாகிகள் இடம் மாறும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதால், கட்சியின் உள் இயக்கம் பலவீனப்படுவதாக மூத்த தலைவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    மறுபுறம், தவெக தரப்பில் இத்தகைய இணைப்புகள் கட்சியின் வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக கொங்கு பகுதியில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதிமுக-வின் ஒற்றுமைக்கு சவாலாக இந்த மாற்றங்கள் அமையுமா என்பது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளில் தெளிவாகும். பொள்ளாச்சி ஜெயராமனின் இந்த வீடியோ பேச்சு, அ.தி.மு.க-வினரிடையே புதிய விவாதங்களை தூண்டியுள்ளது.

    AIADMK pollachi jayaraman
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரூ.23 லட்சம் மோசடி வழக்கு..!! மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் சிவசங்கர் நேரில் ஆஜர்..!!
    Next Article அணுக்கனிம சுரங்கம்; தென் மாவட்ட மக்களுக்கு தவெக அரசு துரோகம்; கனிமொழி எம்.பி, டிடிவி தினகரன் சாடல்
    editor5

    Related Posts

    தவெக MLA-வை மிரட்டி பேரம்..!! செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான இருவரை தட்டித்தூக்கிய போலீஸ்..!!

    July 1, 2026

    தனியார் கல்வி நிறுவனங்கள் தொடந்த வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

    July 1, 2026

    மயிலாடுதுறை : காதலர்கள் தற்கொலை விவகாரம்..! பையனின் பெற்றோர் சாலை மறியல்..!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெக MLA-வை மிரட்டி பேரம்..!! செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான இருவரை தட்டித்தூக்கிய போலீஸ்..!!

    தனியார் கல்வி நிறுவனங்கள் தொடந்த வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

    மயிலாடுதுறை : காதலர்கள் தற்கொலை விவகாரம்..! பையனின் பெற்றோர் சாலை மறியல்..!

    ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவில் முத்திரை பதித்த ‘காளிதாஸ் 2 – தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமை!

    40 டிகிரி வெப்பத்தில் உருகும் UK சாலைகள்; 45 டிகிரியையும் அசால்ட்டாக தாங்கும் இந்திய சாலைகள்!. எப்படி?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.