Close Menu
    What's Hot

    விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய பரிசீலனை  – நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

    வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

    புதுச்சேரி ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் விமர்சை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»பாஜகவுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ்..!! இந்நாள் அமைச்சருக்கு முன்னாள் அமைச்சர் கண்டனம்..!!
    Featured

    பாஜகவுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ்..!! இந்நாள் அமைச்சருக்கு முன்னாள் அமைச்சர் கண்டனம்..!!

    editor5By editor5May 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 53
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் பாஜகவுக்கு ஒத்து ஊதுவதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் சட்ட முன்வடிவை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொண்டு வந்தபோது, எதிர்க்கட்சிகள் உட்பட பாஜகவைத் தவிர்த்த அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

    இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள உயர்கல்வித் துறை அமைச்சரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான விஸ்வநாதன், “ஆளுநரே பல்கலைக்கழகங்களின் வேந்தராகத் தொடரலாம்” என்று தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தி.மு.க. மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

    “மாநில உரிமைகளுக்கு எதிரான இந்த நிலைப்பாடு மிகவும் கண்டனத்திற்குரியது. மத்திய பாஜக அரசால் நியமிக்கப்படும் ஆளுநரே வேந்தராகத் தொடர வேண்டும் என்பது பாஜகவுக்கு ஒத்த குரல் கொடுப்பதாகும். காங்கிரஸ் கட்சி பதவி சுகத்துக்காக தனது கொள்கையை மாற்றிக் கொண்டு பாஜகவின் அடிவருடியாக மாறிவிட்டதா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் இப்போது எதிர் நிலை எடுப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதை கடுமையாகக் கண்டிக்கிறேன்” என்று பொன்முடி வலியுறுத்தினார்.

    இந்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்படும் போது, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சி.பி.ஐ., சி.பி.எம்., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்தன. மாநில சுயாட்சி, கல்வி நிறுவனங்களின் சுயாட்சி மற்றும் மத்திய அரசின் தலையீட்டை குறைக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது.

    ஆனால், தற்போது ஆளுநரின் அதிகாரத்தை நீட்டிக்கும் வகையில் விஸ்வநாதன் தெரிவித்த கருத்து, கூட்டணி கட்சிகளிடையே முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தமிழ்நாட்டில் மாநில உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது. பல்கலைக்கழகங்களில் அரசியல் தலையீடு இல்லாமல், தரமான கல்வி வழங்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரூ.10 கோடியும் மிச்சம்; குப்பை பிரச்சினைக்கும் தீர்வு – தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜியின் பக்கா பிளான்!
    Next Article நவம்பர் 6-ல் வெளியாகிறதா அரசன்? 3-ம் கட்ட படப்பிடிப்பில் விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா..?
    editor5

    Related Posts

    விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய பரிசீலனை  – நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

    May 30, 2026

    வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

    May 30, 2026

    புதுச்சேரி ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் விமர்சை!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய பரிசீலனை  – நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

    வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

    புதுச்சேரி ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் விமர்சை!

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    தாஜ்மஹாலை கணவருடன் கண்டு ரசித்த டிரம்ப் மகள்!.

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய பரிசீலனை  – நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

    May 30, 2026

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    May 30, 2026

    “ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!

    May 30, 2026

    மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு!. தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.