Close Menu
    What's Hot

    ரூ.60 கோடி நில பத்திரப்பதிவு மோசடி.. மீனாட்சி அம்மன் கோயில் விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது!!

    தவெகவினருக்கு சிக்கல்.. ஆன்லைன் பண மோசடி வழக்கில் 3 பேர் கைது! ரூ.200 கோடி பின்னணியா?

    உத்தரகண்டில் வீடு கட்டும் கனவு!. நள்ளிரவில் ரிஷப் பந்த் விடுத்த கோரிக்கை!. பச்சைக்கொடி காட்டிய முதல்வர்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சாமானியர்களுக்கு மேலும் சுமை! பொன்னி, பாஸ்மதி அரிசி விலை அதிரடி உயர்வு.. பின்னணி என்ன?
    Featured

    சாமானியர்களுக்கு மேலும் சுமை! பொன்னி, பாஸ்மதி அரிசி விலை அதிரடி உயர்வு.. பின்னணி என்ன?

    editor5By editor5August 8, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 17 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் அரிசி விலை திடீரென உயர்ந்து வருவதால் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வீட்டுச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. தினசரி உணவின் அடிப்படைப் பொருளான அரிசிக்கு ஏற்படும் இந்த விலை உயர்வு, சமையல் செலவை உயர்த்தி பொதுமக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதால் தமிழகத்தில் நெல் உற்பத்தி குறைந்துள்ளது.

    இதனுடன் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் நெல் விளைச்சல் குறைந்திருப்பதால் சந்தைக்கு வரும் அரிசியின் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு ரக அரிசிகளின் விலை 10 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மொத்தச் சந்தையில் உள்ள வியாபாரிகளின் தகவலின்படி, தமிழகத்திற்கு தஞ்சாவூர் பகுதியுடன் ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்தும் அதிக அளவில் அரிசி வருகிறது.

    குறிப்பாக கர்நாடகாவில் விளையும் பொன்னி சன்னரக அரிசிக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் அங்கு விளைச்சல் குறைந்ததால், கர்நாடக வியாபாரிகள் ஆந்திரா மற்றும் தஞ்சாவூர் பகுதிகளுக்கு வந்து அரிசியை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். இதனால் தமிழக சந்தையில் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது.தற்போது 26 கிலோ பொன்னி சன்னரக அரிசி ரூ.1,400-ல் இருந்து ரூ.1,700 ஆக உயர்ந்துள்ளது. 10 கிலோ பாக்கெட் ரூ.650-ல் இருந்து ரூ.800 ஆகவும், 5 கிலோ ரூ.350-ல் இருந்து ரூ.420 ஆகவும் அதிகரித்துள்ளது.

    கர்நாடகாவிலிருந்து வரும் ஸ்டீம் வகை ராய்ச்சூர் பொன்னி அரிசி 26 கிலோ ரூ.1,250-ல் இருந்து ரூ.1,700 ஆக உயர்ந்து சுமார் 30 சதவீத விலை உயர்வைக் காட்டுகிறது. பாசுமதி அரிசியும் விலை உயர்வில் உள்ளது. 30 கிலோ பாசுமதி முன்பு ரூ.2,200-2,300 ஆக இருந்தது இப்போது ரூ.2,800-3,000 வரை விற்பனையாகிறது. ஒரு கிலோ பாசுமதி ரூ.70-ல் இருந்து ரூ.85-90 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு தொடர்ந்தால் குறைந்த வருமானக் குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    இருப்பினும், புதிய நெல் வரத்து அதிகரிக்கும் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு விலை குறைய வாய்ப்புள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதுவரை நெல் வரத்து மற்றும் அண்டை மாநிலங்களின் விளைச்சலே விலையைத் தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    basmati rice ponni rice Price Hike
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article15 புதிய நீதிபதிகளுடன் சென்னை ஐகோர்ட்டில் புதிய மாற்றம்.. முதல்வர் விஜய் வாழ்த்து!!
    Next Article FCRA திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு.. மத்திய அரசுக்கு மு.க ஸ்டாலின் முக்கிய கோரிக்கை!!
    editor5

    Related Posts

    ரூ.60 கோடி நில பத்திரப்பதிவு மோசடி.. மீனாட்சி அம்மன் கோயில் விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது!!

    August 8, 2026

    தவெகவினருக்கு சிக்கல்.. ஆன்லைன் பண மோசடி வழக்கில் 3 பேர் கைது! ரூ.200 கோடி பின்னணியா?

    August 8, 2026

    உத்தரகண்டில் வீடு கட்டும் கனவு!. நள்ளிரவில் ரிஷப் பந்த் விடுத்த கோரிக்கை!. பச்சைக்கொடி காட்டிய முதல்வர்!

    August 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.60 கோடி நில பத்திரப்பதிவு மோசடி.. மீனாட்சி அம்மன் கோயில் விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது!!

    தவெகவினருக்கு சிக்கல்.. ஆன்லைன் பண மோசடி வழக்கில் 3 பேர் கைது! ரூ.200 கோடி பின்னணியா?

    உத்தரகண்டில் வீடு கட்டும் கனவு!. நள்ளிரவில் ரிஷப் பந்த் விடுத்த கோரிக்கை!. பச்சைக்கொடி காட்டிய முதல்வர்!

    சொத்து வாங்கப் போகிறீர்களா? தமிழகத்தில் நில வழிகாட்டி மதிப்பு உயர்வு! அரசு அதிரடி!!

    உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உடல்நிலை கவலைக்கிடம்? தீயாய் பரவும் தகவல்!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.