சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் மூலம் பயணிகள் பயனடைந்து வரும் நிலையில், தற்போது உருவாக்கப்பட்டு வரும் வழித்தடங்களுக்கான பணிகளை விரைந்து முடித்து செயலுக்கு கொண்டு வர மெட்ரோ பயணிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
அதே போல், “பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்க மத்திய அரசு காலம் தாழ்த்தும் நிலையில் தமிழக அரசு ஏன் இன்னும் அழுத்தம் கொடுக்கவில்லை எனக் கேள்வியும் எழுந்துள்ளது.
கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடங்க உள்ள புதிய மெட்ரோ ரயில் சேவையுடன் சேர்த்து பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ ரயில் திட்டத்தையும் ஒரே நேரத்தில் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறப்பட்டாலும், மாநில அரசு ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை என பயணிகள் அங்கலாய்க்கின்றனர்.
அதே நேரம், நேற்று மெட்ரோ ரயில் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, “கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தை 3வது முறையாக மத்திய அரசு நிராகரித்தது குறித்து ஒரு வார்த்தை கூட முதல்வர் ஜோசப் விஜய் பேசவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களுக்கான அரசாகச் செயல்படுவேன் என உறுதி மட்டும் கூறினால் போதாது சி.எம்.சார், அதனை செயலிலும் காட்டுங்கள் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது.
