இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கேரளா சிறையில் இருக்கும் அசாருதீனின் கோவை உக்கடத்தில் உள்ள  வீட்டில் அமலாக்கத் துறை  அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக  கைது செய்யப்பட்ட கோவையை சேர்ந்த அசாருதீன் கேரளா சிறையில் இருக்கிறார்.

 உக்கடம் அன்பு நகர் மூன்றாவது வீதியிலுள்ள அவரது வீட்டில்,  அமலாக்கத் துறை (ED) அதிகாரிகள் இன்று தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பாதுகாப்புடன் நடைபெற்று வரும் இந்த சோதனையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மற்றும் பணமோசடி (Money Laundering) தொடர்பான ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பின்னணி:

கடந்த 2019-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின தொடர் குண்டுவெடிப்பின் மூளையாகக் கருதப்படும் ஜஹ்ரான் ஹாஷிமுடன் சமூக வலைதள தொடர்பில் இருந்ததாகவும், ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) தீவிரவாத சித்தாந்தத்தை பரப்பியதாகவும் தேசிய புலனாய்வு முகமை (NIA)  அசாருதீனை கைது செய்தது. அவர் கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்டதாகவும், சமூக வலைதளங்கள் மூலம் தீவிரவாத பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும் NIA குற்றம்சாட்டியிருந்தது.

தற்போது நடைபெற்று வரும் அமலாக்கத் துறை சோதனை, சட்டவிரோத நிதி பரிவர்த்தனை மற்றும் பணமோசடி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version