பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ராமாயணா படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. தமிழ் டிரெய்லரை 6 மணி நேரத்துக்குள் 3 லட்சத்து 69 ஆயிரம் பார் பார்த்துள்ளனர்.

ராமனாக ரன்வீர் கபூர், சீதையாக சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள இந்த ராமாயணா திரைப்படம் தீபாவளி அன்று முதல் பாகும் வெளியாகும் நிலையில் அதன் டிரெய்லர் இன்று வெளியாகி வைபை ஏற்படுத்தியுள்ளது.

இத்திரைப்படத்தை நிதேஷ் திவாரி (Nitesh Tiwari) இயக்குகிறார். இவர் முன்னதாக தங்கல், சிச்சோரே ஆகிய படங்களை இயக்கியவர் ஆவார்.

நமித் மல்ஹோத்ரா மற்றும் யாஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில், இராவணனாக கேஜிஎப் புகழ் யாஸ், அனுமனாக சன்னி தியோல், கைகேயியாக லாரா தத்தா, ​சூர்ப்பணகையாக  ரகுல் பிரீத் சிங் , ​மண்டோதரி: காஜல் அகர்வால் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இசையில் இரண்டு பாகங்களாக ராமயாணா உருவாகிறது. முதல் பாகம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 2026-இல் வெளியாகவுள்ளது.   இரண்டாம் பாகம்  2027 தீவாளி பண்டிகைக்கு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் உருவாகியுள்ள ராமாயணா திரைப்பட டிரெய்லரில் காட்சிகள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளன.

ராமாயணக் கதையும் கதாப்பாத்திரங்களும் கேள்விப்பட்டதுதான், ஏற்கனவே பல்வேறு முறை நாடகமாகவும் திரைப்படங்களாகப் பார்த்ததுதான் என்றாலும் தற்போது உருவாகியுள்ள இந்த ராமாயணா முந்தைய சினிமாவை எல்லாம் ஓரம்கட்டிவிடும் வகையில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version