மிழகமே எதிர்பார்க்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழக அரசியல் களம் முன் எப்போதும் இல்லாத அளவு கூடுதல் பரபரப்புடனும் தீவிரத்துடனும் காணப்படுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலையில் திமுக கூட்டணி 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 6 இடங்களிலும்,  தவெக 4 இடங்களிலும் முன்னிலை இருக்கிறது.

சேப்பாக்கம் தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபுவும் முன்னிலை.

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் 75 தபால் வாக்குகள் பெற்று முன்னிலை.திமுக வேட்பாளர் ஆர். டி. சேகர் பெரம்பூரில் 25 வாக்குகள் பெற்று பின்னடைவு.
அதேபோன்று திருவிக நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் முன்னிலை

மயிலாப்பூரில் தபால் வாக்கு வித்தியாசத்தில் தமிழிசை முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version