Close Menu
    What's Hot

    ” வைகோவுக்கு சங்கடம்… திருமாவுக்கு ஆச்சரியம்…” – கோவளம் கூட்டத்தில் நடந்தது என்ன?

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: பார் உரிமையாளர்கள் எச்சரிக்கை!

    “நச்சுத் திட்டம் நலத்திட்டமாக மாறியது எப்படி?” – முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»4 ஆண்டுகளாக தபால்களை டெலிவரி செய்யாமல் பதுக்கிய போஸ்ட்மேன்!. மூட்டை மூட்டையாக கடிதங்கள் பறிமுதல்!
    Featured

    4 ஆண்டுகளாக தபால்களை டெலிவரி செய்யாமல் பதுக்கிய போஸ்ட்மேன்!. மூட்டை மூட்டையாக கடிதங்கள் பறிமுதல்!

    Editor web3By Editor web3July 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Kangeyam postman
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, தபால் ஊழியர் ஒருவர் பொதுமக்களின் கடிதங்களை டெலிவரி செய்யாமல் தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வெள்ளகோவில் தபால் நிலையத்தில் பணிபுரியும் செந்தில்குமார் என்பவர், தட்டாந்தோட்டம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தபால் நிலையத்திலிருந்து பொதுமக்களுக்கு வரவேண்டிய வங்கி ஏடிஎம் கார்டுகள், காசோலை புத்தகங்கள், ஓட்டுநர் உரிமங்கள், வருமான வரித்துறை தொடர்பான ஆவணங்கள் மற்றும் கல்லூரிக் சான்றிதழ்கள் என ஆயிரக்கணக்கான தபால்களை வீட்டின் பின்புறம் நீண்டகாலமாகப் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அதாவது, செந்தில்குமார் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள், அந்தப் பகுதி மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி வந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன், பக்கத்து வீட்டைச் சேர்ந்த பழனியம்மாள் என்பவரை நாய்கள் கடித்து காயப்படுத்தியதால், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டு, நகராட்சி அதிகாரிகள் நாய்களைப் பிடிக்க வந்தபோது, செந்தில்குமாரின் குடும்பத்தினர் அதிகாரிகளை மிரட்டி பணியைத் தடுத்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சுத்தம் செய்யச் சென்றபோதுதான், வீட்டின் அருகே குவியல் குவியலாகக் கிடந்த தபால்கள் பொதுமக்களின் கண்களில் பட்டுள்ளன. 2022 முதல் 2026 வரை டெலிவரி செய்யப்பட வேண்டிய சுமார் 7 சாக்கு மூட்டைக்கும் அதிகமான முக்கிய ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டதுடன், சில தபால்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதும் தெரியவந்தது. பொதுமக்கள் தபால்களைப் பற்றித் தெரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காகவே, நாய்களைப் பாதுகாப்பிற்காக அவர் வளர்த்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    திருப்பூர் தலைமை தபால் நிலைய அதிகாரிகளுக்குப் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 மூட்டை தபால்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    Postal letters Postman tirupur
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய்யுடன்  நடந்த ஆலோசனை.. தவெக கூட்டணியின் 3 முக்கிய முடிவுகள்
    Next Article கழிப்பறைக்கு என்ன ஆஃபரா கொடுக்கிறீங்க?. நள்ளிரவில் திடீர் விசிட்!. எம்.எல்.ஏ.விடமே வசூல் வேட்டை!
    Editor web3
    • Website

    Related Posts

    ” வைகோவுக்கு சங்கடம்… திருமாவுக்கு ஆச்சரியம்…” – கோவளம் கூட்டத்தில் நடந்தது என்ன?

    July 1, 2026

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: பார் உரிமையாளர்கள் எச்சரிக்கை!

    July 1, 2026

    “நச்சுத் திட்டம் நலத்திட்டமாக மாறியது எப்படி?” – முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ” வைகோவுக்கு சங்கடம்… திருமாவுக்கு ஆச்சரியம்…” – கோவளம் கூட்டத்தில் நடந்தது என்ன?

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: பார் உரிமையாளர்கள் எச்சரிக்கை!

    “நச்சுத் திட்டம் நலத்திட்டமாக மாறியது எப்படி?” – முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

    வசூல் வேட்டை!. அருந்ததி சாதனையை முறியடித்த சமந்தாவின் ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம்!

    அரசுப் பள்ளி ஆசிரியரின் அநாகரிக செயல்!. மதுபோதையில் பொதுவெளியில் ரகளை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.