வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே  சேர்க்காட்டில் தமிழக அரசின் திருவள்ளூவர் பல்கலைக்கழகம் செயல்படுகிறது இதன் கட்டுபாட்டில் வேலூர், திருவண்ணாமலை ,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் இதன் கட்டுபாட்டில் செயல்படுகின்றன இப்பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் தொடர்கிறது சில தினங்களுக்கு முன்னர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆய்வக பொறுப்பாளர் கைது செய்யப்பட்டார்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள உள்ளக விசாரணை குழு பாலியல் புகார்களை மூடி மறைக்கவே முழுமையாக செயல்படுகிறது இதற்கு முழு பொறுப்பாக உள்ள தேர்வு கட்டுபாட்டு அலுவலர் பாபு ஜனார்த்தனம் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் திருவள்ளூவர் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் தலைவர் சிவா தலைமையில் ஆர்பாட்டத்தில் மூன்று நாட்கள் ஈடுபட முடிவு செய்து கௌரவத்தலைவர் பேராசிரியர் இளங்கோ உள்ளிட்டோர் கண்டன முழக்க ஆர்பாட்டத்தை துவங்கியுள்ளனர்.

இதற்கு சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம் பாலியல் சீண்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தீர்ப்பளித்தும் கடந்த 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் பல்கலைக்கழகம் மூடி மறைக்கிறது எனவே சிறுபான்மை இன பெண் கொடுத்த பாலியல் சீண்டல் மீண்டும் விசாரணை நடத்த வேண்டுமென கோரி இந்த ஆர்பாட்டம் நடைபெறுகிறது  இதில்  தொழிலாளர்கள் சங்க கௌரவத்தலைவர் பேராசிரியர் இளங்கோ ஆர்பாட்டத்தை துவங்கினார்.

பிரதாபன், குமார் உள்ளிட்ட திரளான பேராசிரியர்களும் பல்கலைக்கழக தொழிலாளர்களும் கலந்துகொண்டனர் போலீசாருடன் பேராசிரியர்களும் தொழிலாளர்களும் வாக்குவாதம் செய்து பின்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு காணப்பட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version