திருப்பத்தூர் மாவட்டம் எல்லபள்ளி ஏரி கொடி ரயில்வே லைன் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வழிப்பாதை இல்லாததால் திருப்பத்தூர் நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் சாலை வசதி இல்லை என்று கூறி நீண்ட காலமாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் சாலை மறியலில் ஈடுபட்டதால் சம்பவ இடத்திற்கு நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் மூர்த்தி வருவாய் துறையினர் மற்றும் ஒன்றிய ஆணையாளர் வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் இடத்தை ஆய்வு  மேற்கொண்டு சாலை வசதி ஏற்படுத்தி கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version