தமிழ்நாட்டின் முதலமைச்சரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான நடிகர் ஜோசப் விஜய் அவர்களின் சமீபத்திய படைப்பான ‘ஜனநாயகன்’ திரைப்படம், பல்வேறு சவால்களைத் தாண்டி இன்று (ஜூலை 23) காலை 9 மணி ஷோவாக தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், முதல் நாளே பல இடங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள பிரபல சுபா திரையரங்கில் இன்று காலை முதல் காட்சியாக ‘ஜனநாயகன்’ திரையிடப்பட்டது. தியேட்டர் நிரம்பி வழிந்த ரசிகர்களின் உற்சாகம் களைகட்டிய நிலையில், ஒரு சுவாரசியமான ஏற்பாடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கிரீனுக்கு அருகிலுள்ள மேடைப் பகுதியில் ரசிகர்கள் ஏறி ஆடுவதையோ, அரங்கத்தை சேதப்படுத்துவதையோ தடுக்கும் விதமாக, தியேட்டர் நிர்வாகம் சார்பில் கருவேலி முள்ளை வெட்டி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் விஜய்யின் திரைப்படத்துக்கு இத்தகைய வரவேற்பு கிடைப்பது மகிழ்ச்சியளிக்கும் நிலையில், மறுபுறம் ரசிகர்களின் உற்சாகத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான ஏற்பாடுகள் விவாதத்துக்குரியதாக மாறியுள்ளன. ‘ஜனநாயகன்’ திரைப்படம் முழு தமிழகத்திலும் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
