மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

வாக்கு திருட்டு‘ (Vote Chori) மற்றும்அரசு திருட்டு‘ (Sarkar Chori) ஆகியவற்றைத் தொடர்ந்து, தற்போதுதொகுதி திருட்டு‘ (Seat Chori) மூலமாக தேர்தல் போட்டியே தொடங்குவதற்கு முன்பே பாஜகதேர்தல் ஆணையத்தின் (EC) இந்த `ஜுகல்பந்தி‘ (கூட்டுச் செயல்பாடு) அதை முடித்துவிட்டது.

சமீபத்தில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் என்ன நடந்தது என்று பாருங்கள்.

காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தார். அவர் மீது எந்த நிலுவை வழக்குகளும் இல்லை. ஆனால், பாஜக எழுப்பிய ஒரு சாதாரண ஆட்சேபனையை ஏற்றுக்கொண்டு, தேர்தல் ஆணையம் அவரது வேட்புமனுவை நிராகரித்தது.

ஆனால், பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் பரிமல் நத்வானி, வேட்புமனுவில் தனது பெயரையே தவறாகக் குறிப்பிட்டிருந்தார், மேலும் பல கட்டாயத் தகவல்களை அவர் தெரிவிக்கவே இல்லை. அவருக்கு அந்தத் தவறுகளைச் சரிசெய்ய தேர்தல் ஆணையம் கூடுதல் கால அவகாசம் வழங்கியது.

ஒரே தேர்தல் ஆணையம். இரு வேறு வேட்பாளர்கள். ஒருவருக்கு விசாரணை கூட நடத்தப்படாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. மற்றவர் விதிகளைப் பின்பற்றாத போதிலும் ஆதரிக்கப்பட்டார்.

காங்கிரஸ் இது தொடர்பாகச் சந்திக்க முயன்றபோது, தேர்தல் ஆணையம் முதலில் எங்களைத் தவிர்க்கப் பார்த்தது. இறுதியாக நாங்கள் சந்தித்தபோது, அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

இனி வரும் காலங்களில் இதைப் போன்ற பல சம்பவங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். ஏனெனில், தேர்தலை நேர்மையாக வெல்வதை விட, அதைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வது பாஜகவுக்கு மிகவும் எளிதானது.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version