மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 56-வது பிறந்தநாள் விழா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரால் மிகவும் பிரம்மாண்டமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அருள்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் மற்றும் நகர காங்கிரஸ் தலைவர் நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தொண்டர்கள், ராகுல் காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாடினர்.

பிறந்தநாள் விழாவின் முக்கிய நிகழ்வாக, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 1,000 பேருக்கு 100 கிலோ அளவிலான சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து ஆட்சிப் பொறுப்பில் காங்கிரஸ் பங்கேற்றுள்ள சூழலில், கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பிறந்தநாள் விழா மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. வழக்கத்தை விட அதிகப்படியான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்த விழாவில் திரளாகப் பங்கேற்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version