மிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவை நிகழ்வுகளின் நேரலை ஒளிபரப்பு தொடரப்படாததை சுட்டிக்காட்டி அதிமுக கடும் விமர்சனம் மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அதிமுக, தேர்தல் காலத்தில் மற்றும் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பேரவை நடவடிக்கைகள் முழுமையாக நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று த.வெ.க. அரசு வலியுறுத்தியிருந்ததை நினைவூட்டியுள்ளது. ஆனால், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான முக்கிய விவாதம் தொடங்கியபோது நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

“முழு நேரலை… முழு நேரலை… என்று கூறியது வெறும் உருட்டுதானா? ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்” என்று அதிமுக தனது பதிவில் விமர்சித்துள்ளது.

மேலும், வெளிப்படையான ஆட்சியை வழங்குவதாக கூறிய அரசு, சட்டப்பேரவையின் முக்கிய விவாதங்களை மக்களிடம் கொண்டு செல்லும் விவகாரத்தில் ஏன் பின்வாங்குகிறது என்றும் அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. “எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றும் எண்ணமே இல்லையா?” என்றும் அந்தக் கட்சி சாடியுள்ளது.

சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலையில் ஒளிபரப்புவது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று முன்னதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்திருந்தார். இருப்பினும், பேரவை ஒளிபரப்பு விவகாரம் தற்போது அரசியல் விவாதமாக மாறியுள்ளது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version