நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராகப் போராடி வரும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினருடன் (CJP) பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

சிஜேபி பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய அமைச்சரின் அலுவலகத்திற்கோ அல்லது அவரது இல்லத்திற்கோ எந்த நேரத்திலும் வரலாம் என்று மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் ஜெ.ஜி.நட்டா, மாணவர்களின் நலனுக்காக அரசு தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். உண்ணாவிரத போராட்டம் இருந்த சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நட்டாவை ஏற்கனவே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி வலிக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி, கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி கலைத்தனர்.  இந்த சம்பவத்தையடுத்து, போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தை பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதனிடையே, நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் நாளை (ஜூலை 24) நாடு தழுவிய ஒரு நாள் போராட்டம் நடத்தப்படும் என சிஜேபி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version