Close Menu
    What's Hot

    30 நாட்கள் சிறையில் இருந்தால் நிரந்தர தகுதி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!

    பிரபல எழுத்தாளர், சாகித்திய அகாடமி விருது பெற்ற பூமணி காலமானார்: இலக்கிய உலகினர் இரங்கல்!

    மத்திய கிழக்கில் பதற்றம்: பஹ்ரைன், கத்தார், குவைத்தில் ஒலித்த அவசர எச்சரிக்கை சைரன்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பிரபல எழுத்தாளர், சாகித்திய அகாடமி விருது பெற்ற பூமணி காலமானார்: இலக்கிய உலகினர் இரங்கல்!
    Featured

    பிரபல எழுத்தாளர், சாகித்திய அகாடமி விருது பெற்ற பூமணி காலமானார்: இலக்கிய உலகினர் இரங்கல்!

    Editor web1By Editor web1July 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    A
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ் இலக்கிய உலகின் முன்னணி எழுத்தாளரும், சாகித்திய அகாடமி விருது பெற்றவருமான பூமணி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 78.

    தமிழ்நாட்டின் கரிசல் மண்ணின் யதார்த்த வாழ்க்கையையும், எளிய மக்களின் வாழ்வியலையும் தனது எழுத்துக்களின் மூலம் உலகிற்குக் காட்டியவர் பூமணி. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின் இயற்பெயர் பூ.மாணிக்கவாசகம்.

    இவர் எழுதிய ‘வெக்கை’, ‘பிறகு’, ‘அஞ்ஞாடி’ உள்ளிட்ட நாவல்கள் தமிழ் இலக்கியத்தின் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இதில் 1980-களில் வெளியான ‘வெக்கை’ நாவலைத் தழுவிதான், வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகிப் பிரம்மாண்ட வெற்றி பெற்ற ‘அசுரன்’ திரைப்படம் உருவாக்கப்பட்டது.

    B

    2014–ம் ஆண்டு இவர் எழுதிய வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘அஞ்ஞாடி’ நாவலுக்குத் தமிழ் இலக்கியத்தின் உயரிய விருதான சாகித்திய அகாடமி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

    எழுத்தோடு நின்றுவிடாமல், கருவேல மரங்களை மையமாகக் கொண்டு 1996-ல் ‘கருவேலம்பூக்கள்’ என்ற திரைப்படத்தையும் பூமணி இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது. வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள், நல்லநாள் உள்ளிட்ட சிறுகதை தொகுப்புகளையும் பூமணி எழுதி உள்ளார். இலக்கிய சிந்தனை பரிசு, அக்னி விருது, திருவனந்தபுரம் தமிழ் சங்க விருது, விஷ்ணுபுரம் விருது உள்ளிட்ட விருதுகள், பரிசுகளை பூமணி பெற்றுள்ளார்.  

    சென்னையில் காலமான பூமணியின் உடல், பொதுமக்கள் மற்றும் இலக்கியவாதிகளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் அவரது சொந்த ஊரான கோவில்பட்டிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அவரின் இறுதிச் சடங்குகள் இன்று (ஜூலை 13) மாலை கோவில்பட்டி பாரதிநகர் மேட்டுத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கரிசல் இலக்கியத்தின் ஒரு முக்கியத் தூணாக விளங்கிய எழுத்தாளர் பூமணியின் மறைவு, தமிழ் எழுத்துலகிற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமத்திய கிழக்கில் பதற்றம்: பஹ்ரைன், கத்தார், குவைத்தில் ஒலித்த அவசர எச்சரிக்கை சைரன்கள்!
    Next Article 30 நாட்கள் சிறையில் இருந்தால் நிரந்தர தகுதி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!
    Editor web1
    • Website

    Related Posts

    30 நாட்கள் சிறையில் இருந்தால் நிரந்தர தகுதி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!

    July 13, 2026

    “தவெக ஆட்சி முடியும்போது ரூ.15 லட்சம் கோடி கடன் இருக்கும்”: அண்ணாமலை கருத்து!

    July 12, 2026

    “2031-ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்”– ‘வீ தி லீடர்ஸ்’ மாநாட்டில் அண்ணாமலை அதிரடி முழக்கம்!

    July 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    30 நாட்கள் சிறையில் இருந்தால் நிரந்தர தகுதி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!

    பிரபல எழுத்தாளர், சாகித்திய அகாடமி விருது பெற்ற பூமணி காலமானார்: இலக்கிய உலகினர் இரங்கல்!

    மத்திய கிழக்கில் பதற்றம்: பஹ்ரைன், கத்தார், குவைத்தில் ஒலித்த அவசர எச்சரிக்கை சைரன்கள்!

    விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’ பட டீசர் வெளியானது: மிஷ்கின் இயக்கத்தில் த்ரில்லர் ஜர்னி!

    “தவெக ஆட்சி முடியும்போது ரூ.15 லட்சம் கோடி கடன் இருக்கும்”: அண்ணாமலை கருத்து!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.