Close Menu
    What's Hot

    மத்திய கிழக்கில் பதற்றம்: பஹ்ரைன், கத்தார், குவைத்தில் ஒலித்த அவசர எச்சரிக்கை சைரன்கள்!

    விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’ பட டீசர் வெளியானது: மிஷ்கின் இயக்கத்தில் த்ரில்லர் ஜர்னி!

    “தவெக ஆட்சி முடியும்போது ரூ.15 லட்சம் கோடி கடன் இருக்கும்”: அண்ணாமலை கருத்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»மத்திய கிழக்கில் பதற்றம்: பஹ்ரைன், கத்தார், குவைத்தில் ஒலித்த அவசர எச்சரிக்கை சைரன்கள்!
    உலகம்

    மத்திய கிழக்கில் பதற்றம்: பஹ்ரைன், கத்தார், குவைத்தில் ஒலித்த அவசர எச்சரிக்கை சைரன்கள்!

    Editor web1By Editor web1July 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கத்தார், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் அவசரக் கால ஏவுகணை எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கவிடப்பட்டதோடு, பொதுமக்களின் மொபைல் போன்களுக்கும் அவசர எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதால் வளைகுடா பிராந்தியத்தில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.

    அமெரிக்கப் படைகள் ஈரான் மீது நடத்திய புதிய தாக்குதல்களைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கூறி, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஈரானில் உள்ள பல முக்கிய இலக்குகள் மீது அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு அண்மையில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதற்குப் பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின.

    ஈரானின் இந்த அதிரடிப் பதில் தாக்குதல் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, அண்டை நாடுகளான கத்தார், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தங்களது பாதுகாப்பு நிலையை உடனடியாக உயர்த்தின.

    நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பதாகக் கத்தார் உள்நோட்டு அமைச்சகம் பொதுமக்களுக்கு மொபைல் போன்கள் மூலம் அவசர எச்சரிக்கை விடுத்தது. மக்கள் அனைவரும் வீடுகளிலோ அல்லது பாதுகாப்பான இடங்களிலோ இருக்குமாறும், அதிகாரப்பூர்வ உத்தரவுகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பஹ்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் குவைத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘குனா’, இரு நாடுகளிலும் ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததை உறுதிப்படுத்தியுள்ளன. பொதுமக்கள் யாரும் பீதியடையாமல், உடனடியாக தங்களுக்கு அருகில் உள்ள பாதுகாப்பான தங்குமிடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் சேதுபதியின் ‘டிரெயின்’ பட டீசர் வெளியானது: மிஷ்கின் இயக்கத்தில் த்ரில்லர் ஜர்னி!
    Editor web1
    • Website

    Related Posts

    ஜாஸ்க் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்; ஈரான் வீரர் உயிரிழப்பு!

    July 12, 2026

    அமெரிக்க செனட்டர் லின்ட்சி கிரஹாம் மறைவு; ‘மிகச் சிறந்த தேசபக்தர்’ என டிரம்ப் இரங்கல்

    July 12, 2026

    மீண்டும் வெடித்த போர்!. ஹார்முஸ் நீரிணையை மூடிய ஈரான்!. மத்திய கிழக்கில் பதற்றம்!

    July 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மத்திய கிழக்கில் பதற்றம்: பஹ்ரைன், கத்தார், குவைத்தில் ஒலித்த அவசர எச்சரிக்கை சைரன்கள்!

    விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’ பட டீசர் வெளியானது: மிஷ்கின் இயக்கத்தில் த்ரில்லர் ஜர்னி!

    “தவெக ஆட்சி முடியும்போது ரூ.15 லட்சம் கோடி கடன் இருக்கும்”: அண்ணாமலை கருத்து!

    “2031-ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்”– ‘வீ தி லீடர்ஸ்’ மாநாட்டில் அண்ணாமலை அதிரடி முழக்கம்!

    “போதையில்லா தமிழகம்!” – அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ முதல் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.