Close Menu
    What's Hot

    ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் அதிரடி.. இந்திய கப்பல் வழிமறிப்பு! நிலவும் பதற்றம்..!!

    ஒரு ரூ.500 நோட்டு… அயோத்தி ராமர் கோயிலில் வெளிச்சத்துக்கு வந்த கோடி ரூபாய் திருட்டு..!! பகீர் காரணம்..!!

    PF பயனர்களுக்கு குட்நியூஸ்!. ஜூலை 15-க்குள் வட்டி வரவு!. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»உக்ரைன் மீது ரஷ்யாவின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு  
    Featured

    உக்ரைன் மீது ரஷ்யாவின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு  

    Editor TN TalksBy Editor TN TalksJuly 8, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    020 russiya
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய இரவு நேர ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் கீவ் உள்ளிட்ட பல பகுதிகளில் 3 பேர் உயிரிழந்தனர். தலைநகர் கீவ் தொடர்ந்து இரண்டாவது நாளாக சக்திவாய்ந்த தாக்குதலுக்கு உள்ளானது.

    நள்ளிரவுக்குப் பிறகு கீவ் நகரில் பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டதாகவும், அதன் பின்னரே வான்வழி தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுவாக தாக்குதலுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்படும் நிலையில், இந்த முறை வெடிப்புகளுக்குப் பிறகு எச்சரிக்கை வெளியானது குறிப்பிடத்தக்கது.

    உக்ரைனின் கார்கிவ் நகரில் நடந்த தொடர் தாக்குதல்களில் 2 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்தனர் என்று அந்த நகரின் மேயர் இகோர் தெரெகோவ் தெரிவித்தார்.

    உக்ரைன் விமானப்படை வெளியிட்ட தகவலின்படி, ரஷ்யா ஒரே இரவில் 169 நீண்ட தூர தாக்குதல் ட்ரோன்கள் மற்றும் 7 ஏவுகணைகளை ஏவியது. இதில் 5 பாலிஸ்டிக் ஏவுகணைகளும் அடங்கும். உக்ரைன் வான் பாதுகாப்புப் படைகள் 139 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியோ அல்லது செயலிழக்கச் செய்தோ தடுத்ததாகவும், 2 ரேடார் எதிர்ப்பு ஏவுகணைகள் இலக்கை அடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், 5 பாலிஸ்டிக் ஏவுகணைகளும், 20 ட்ரோன்களும் 15 இடங்களில் தாக்குதலை மேற்கொண்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    மறுபுறம், கீவில் உள்ள ஆயுத உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ‘Flamingo’ குரூஸ் ஏவுகணைக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் நடுத்தர, நீண்ட தூர ட்ரோன்கள் ஒன்றுசேர்க்கப்படும் மையம் குறிவைத்து தாக்கப்பட்டதாக ரஷ்யா கூறியுள்ளது.

    ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலின்படி, செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை உக்ரைன் ஏவிய 415 ட்ரோன்கள் ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன.

    ரஷ்யாவின் சரடோவ் பிராந்திய ஆளுநர் ரோமன் புசார்கின் கூறுகையில், உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர். மேலும், சில தொழிற்சாலைகளும் சேதமடைந்ததாக தெரிவித்தார்.

     

    உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி, ரஷ்யாவின் சரடோவ், டாடர்ஸ்தான், பாஷ்கோர்டோஸ்தான் மற்றும் வொரோனெஷ் உள்ளிட்ட பகுதிகளில் உக்ரைன் நீண்ட தூர தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்தார். சரடோவ் மற்றும் டாடர்ஸ்தானில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

    Drone Attack Missile Attack russia russia - ukraine war Ukraine
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுவியல் குவியலாக 10 ரூபாய் நாணயங்கள்!. பைக் வாங்கி அசத்திய நபர்!. தெலங்கானாவில் நெகிழ்ச்சி!
    Next Article FIFA UPDATE : தோல்வி எதிரொலி – குரோஷியா தலைமைப் பயிற்சியாளர் ஸ்லாட்கோ டாலிச் ராஜினாமா
    Editor TN Talks

    Related Posts

    ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் அதிரடி.. இந்திய கப்பல் வழிமறிப்பு! நிலவும் பதற்றம்..!!

    July 8, 2026

    ஒரு ரூ.500 நோட்டு… அயோத்தி ராமர் கோயிலில் வெளிச்சத்துக்கு வந்த கோடி ரூபாய் திருட்டு..!! பகீர் காரணம்..!!

    July 8, 2026

    PF பயனர்களுக்கு குட்நியூஸ்!. ஜூலை 15-க்குள் வட்டி வரவு!. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு!

    July 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் அதிரடி.. இந்திய கப்பல் வழிமறிப்பு! நிலவும் பதற்றம்..!!

    ஒரு ரூ.500 நோட்டு… அயோத்தி ராமர் கோயிலில் வெளிச்சத்துக்கு வந்த கோடி ரூபாய் திருட்டு..!! பகீர் காரணம்..!!

    PF பயனர்களுக்கு குட்நியூஸ்!. ஜூலை 15-க்குள் வட்டி வரவு!. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு!

    அடேங்கப்பா..!! தினமும் லட்சத்தை தொடும் மக்கள் வருகை.. அம்மா உணவகங்களுக்கு கூடும் மவுசு..!!

    தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க உத்தரவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.