Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»போராட்ட மாணவர்கள் கைது விவகாரம்..!! விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
    Featured

    போராட்ட மாணவர்கள் கைது விவகாரம்..!! விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    editor5By editor5July 28, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 23 14
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற அமைதியான பேரணியின்போது போலீசார் நடத்திய தடியடி, கண்ணீர் புகை மற்றும் பெல்லட் குண்டு தாக்குதலுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் மீது அளவுக்கு அதிகமான பலப்பிரயோகம் செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது.

    கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். போலீசார் தடுத்து நிறுத்தியபோது மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார் தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் பெல்லட் குண்டுகளையும் பயன்படுத்தினர். இச்சம்பவத்தில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் என இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.

    இந்நடவடிக்கைக்கு எதிராக பல வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டன. காயமடைந்த போலீசார் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு (நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி, மோகனா) இந்த வழக்குகளை விசாரித்தது. நீதிபதிகள், “அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமை அரசியல் சாசனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெறுமனே போராட்டம் நடைபெறுகிறது என்பதற்காக போலீசார் அத்துமீற முடியாது” என்று தெரிவித்தனர்.

    வரம்பு மீறல் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, போராட்டம் என்பதற்காக தடியடி நடத்துவது ஏற்புடையதல்ல என்றும் வலியுறுத்தினர். அடுத்த நாள் மாணவர்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்தபோது தலைமை நீதிபதி சூர்யகாந்த் பல முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். மாணவர்களுக்கு அரசியல் சாசன உரிமைகள் முழுமையாக உள்ளன என்று அறிவித்த அவர், கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டார்.

    கிரிமினல் பின்னணி இல்லாதவர்களை உடனே விடுதலை செய்யவும், வழக்குப் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் தெரிவித்தார். மராட்டியம், பீகார், உத்தர பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, போராட்டம் நடைபெற்ற இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள், வீடியோ பதிவுகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் பாதுகாக்க வேண்டும் என்றார்.

    மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவம் குறித்து சுதந்திரமான, விரிவான விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்க உத்தரவிட்டார். விசாரணை நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த வழக்கு ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மாணவர்களின் அமைதியான போராட்ட உரிமையை பாதுகாக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

    protest Students supreme court
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருச்சி காவேரி ஆற்றில் விபரீதம்!. டன் கணக்கில் செத்து குவியும் மீன்களால் அதிர்ச்சி!
    Next Article கூடலூர்; சாலையில் நடந்து சென்றவரைத் தூக்கி வீசிய கார்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!
    editor5

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.