செங்கோட்டையன் தனது MLA பதவியை சற்று முன்பு ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து அவரின் அடுத்தகட்ட நிலைப்பாடு என்ன? என்பது பற்றி வெளியாகி வரும் அரசியல் வட்டார தகவல்களை இங்கு பார்க்கலாம்.

“ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க வேண்டும்” என தொடர்ந்து கூறி வந்த செங்கோட்டையன் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்பு தற்போது சபாநாயகர் அப்பாவு அவர்களை சந்தித்து தனது MLA பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவர் முன்பே கூறப்பட்டது போல, தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவார் என்று ஒருபுறம் எதிர்பார்க்கப்படுகிறது. அதனை மையப்படுத்தி எழுந்த தகவல்களை பொறுத்தவரை, தொலைபேசியில் Confrence Call வாயிலாக செங்கோட்டையனை விஜய்யிடம் பேச வைத்துள்ளார் தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா. அந்த உரையாடலில், “MGR உடன் பயணித்த உங்களை போன்றவர்கள் எனக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் அண்ணா. தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம்” என செங்கோட்டையனிடம் விஜய் சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்ன பொறுப்பு வழங்கப்படும் என முடிவு செய்த பின்னர் இணைவு நிகழ்ச்சி நடக்கலாம் எனவும் சொல்லப்பட்டது. மேலும், TTV தினகரனுடன் பேசிய செங்கோட்டையன் ‘தவெக’ பக்கம் வருமாறு கூட பேசியதாக தகவல் வெளியானது. இந்த அளவிற்கு பேசிய பின்னர் தமிழக வெற்றிக்கழகம் தான் செங்கோட்டையனின் அடுத்த தேர்வு என நாம் முடிவுக்கு வரும் வேளையில் அடுத்த தகவல் நம்மை குழம்ப வைக்கிறது.

அதாவது, ‘தவெக’வில் இணைவதாக இருந்த செங்கோட்டையனை திமுக அமைச்சர் ஒருவர் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அவரை திமுகவில் இணைக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கிறது அந்த தகவல். அவர் சென்னையை சேர்ந்தவர் என குறிப்பிட்டு சொல்லப்பட்ட நிலையில், தற்போது ராஜினாமா செய்த பின்னர் சற்று நேரம் அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து விட்டு சென்றுள்ளார் செங்கோட்டையன். அதுமட்டுமில்லாமல், அவருக்கு எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி ஏற்பட்ட சமயம் தொட்டே அவரோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்திருக்கிறது திமுக. இத்தகைய தகவல்கள், இதற்கு முன்பு திமுகவில் இணைந்த அன்வர் ராஜா, மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் போன்றோரது வரிசையில் அடுத்ததாக செங்கோட்டையனா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நம்மை குழப்பும் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் செங்கோட்டையன் மூலமாகவே இன்று அல்லது நாளை தெரிந்து விடும் என நம்பலாம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version