குதிரை பேர வழக்கு தொடர்பாக திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் செந்தில்பாலாஜி கையெழுத்திட வராததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தவெக எம்.எல்.ஏவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் காலையும் மாலையும் கையெழுத்திட்டு வருகிறார்.
இன்று டாஸ்மாக் வழக்கில் செந்தில்பாலாஜி முன் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் செந்தில் பாலாஜியின் முன் ஜாமீன் மனுவினை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், அவர் வழக்கமாக கையெழுத்திடவேண்டிய நேரத்துக்கு திருவல்லிக்கேணி காவல்நிலையத்துக்கு அவர் வராததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி வராதது குறித்து காவல்துறையிடம் எந்த வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த பரபரப்புக்கிடையே செந்தில்பாலாஜி விடுதி அறையில் இல்லை எனவும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
