Close Menu
    What's Hot

    ஜப்பானை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு.. 13 பேர் பரிதாப பலி!

    வழக்கறிஞர்களும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்..! சென்னை உயர்நீதிமன்றம் கருத்து..!

    நள்ளிரவில் வெடித்த பதற்றம்… அமெரிக்க தளங்களை குறிவைத்து ஏவுகணைகளை ஏவிய ஈரான்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பூங்காவனம் நியாபகமிருக்கா..?? பிரபல ‘திருமதி செல்வம்’ சீரியல் நடிகர் ஜெயமணி காலமானார்..!!
    Featured

    பூங்காவனம் நியாபகமிருக்கா..?? பிரபல ‘திருமதி செல்வம்’ சீரியல் நடிகர் ஜெயமணி காலமானார்..!!

    editor5By editor5July 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 12 13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர் ‘சிறகடிக்க ஆசை’யில் ரோகிணியின் மலேசியா மாமாவாகவும், கறிக்கடைக்காரராகவும் நடித்து ரசிகர்களின் அன்பை வென்ற நடிகர் வி.சி. ஜெயமணி, திடீர் மாரடைப்பால் காலமானார். சென்னை வடபழனியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று (ஜூலை 28) இரவு இச்சம்பவம் நடந்தது. அவர் தனது 76வது வயதில் மறைந்தார்.

    சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமதி செல்வம்’ தொடரில் பூங்காவனம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றவர் ஜெயமணி. அதன்பிறகு பல தொடர்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். சமீப ஆண்டுகளில் சில காலம் திரையில் தென்படாமல் இருந்த அவர், கடந்த ஆண்டு ‘சிறகடிக்க ஆசை’யில் மீண்டும் அறிமுகமானார்.

    ரோகிணிக்கு ஆதரவாகவும், குடும்ப ரகசியங்களை வெளிப்படுத்தும் முக்கிய கதாபாத்திரமாகவும் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. குறைந்த எபிசோடுகளுக்காக வந்த அவர், பின்னர் அதிக காட்சிகளில் இடம்பெற்று தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரசிகர்கள் முன்வைத்தனர்.

    குழந்தை நட்சத்திரமாக நாடகங்களில் தொடங்கிய அவர், சுமார் 40 தொடர்களை இயக்கியுள்ளார். ஆர்.ஜே. பாலாஜி நடித்த ‘சொர்க்கவாசல்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சங்கம் மற்றும் டப்பிங் யூனியன் உறுப்பினராகவும் பணியாற்றியவர். அவரது மனைவி மாலதி டப்பிங் கலைஞராகவும், மகள் நந்தினி ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.

    அவரது மறைவு செய்தி வெளியானதும் சின்னத்திரை கலைஞர்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் சமூக வலைதளங்களில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயல்பான நடிப்பால் பலரின் மனதை கவர்ந்த ஜெயமணியின் மறைவு தமிழ் சின்னத்திரைக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது.

    serial actor vc jayamani
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னை – செய்யாறு 4 வழிச்சாலை டெண்டர் ரத்து.. திட்டத்தின் அடுத்த கட்டம் என்ன?
    Next Article பழனி நில மோசடி வழக்கில் சிபிசிஐடி அதிரடி ஆக்ஷன்..!! அதிகாலையில் 4 பேரை சுற்றிவளைத்து கைது!
    editor5

    Related Posts

    ஜப்பானை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு.. 13 பேர் பரிதாப பலி!

    July 29, 2026

    வழக்கறிஞர்களும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்..! சென்னை உயர்நீதிமன்றம் கருத்து..!

    July 29, 2026

    நள்ளிரவில் வெடித்த பதற்றம்… அமெரிக்க தளங்களை குறிவைத்து ஏவுகணைகளை ஏவிய ஈரான்!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜப்பானை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு.. 13 பேர் பரிதாப பலி!

    வழக்கறிஞர்களும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்..! சென்னை உயர்நீதிமன்றம் கருத்து..!

    நள்ளிரவில் வெடித்த பதற்றம்… அமெரிக்க தளங்களை குறிவைத்து ஏவுகணைகளை ஏவிய ஈரான்!

    ரெடியா.. போலாமா..?? இன்று சென்னை மெட்ரோவில் பயணித்து ஆய்வு செய்கிறார் முதல்வர் விஜய்!

    பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ரத்தக்களரி..!! போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.