Close Menu
    What's Hot

    சட்டசபையில் எங்களுக்கு பேச்சு உரிமை கொடுக்கல..!! வெளிநடப்பு செய்த இபிஎஸ் பகீர் குற்றச்சாட்டு..!!

    தவெகவில் உட்கட்சி மோதல்: சிவகாசியில் அமைச்சர்கள் இடையே பனிப்போர்..!! நடந்தது என்ன..??

    முதல்வர் விஜய் பிறந்தநாள்..!! பால் குடம் எடுத்த பெண்கள்..!! படவேட்டம்மன் கோயிலில் பாலாபிஷேகம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பெங்களூரு விமான நிலையத்தில் பகீர்!. ஒரு மணி நேரத்தில் 2 மோசடிக்காரர்கள்!. பயணியின் எச்சரிக்கை வீடியோ!
    Featured

    பெங்களூரு விமான நிலையத்தில் பகீர்!. ஒரு மணி நேரத்தில் 2 மோசடிக்காரர்கள்!. பயணியின் எச்சரிக்கை வீடியோ!

    Editor web3By Editor web3June 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Scammers Bengaluru Airport
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தன்னிடம் மோசடி செய்ய முயன்ற இரண்டு பேரை ஒரு மணி நேர இடைவெளியில் பயணி ஒருவர் கச்சிதமாகப் பிடித்துள்ளார். அதில் ஒரு மோசடிக்காரர் பயந்து ஓடும் தற்போதைய வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பரவி வருகிறது.

    https://www.instagram.com/ranvijayy_vlogs/reel/DZ2UxFgq5db/

    @ranvijayy_vlogs என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அதிர்ச்சி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் தொடக்கத்தில், பயணி ஒருவர் மோசடிக்காரனை தனது மொபைல் கேமராவில் பதிவு செய்தபடி, “வா, போலீசிடம் போகலாம், அங்கு போய் பேசிக்கொள்ளலாம். பாருங்கள் எப்படி ஓடுகிறான் என்று! இவர்கள் அனைவரும் ஏமாற்றுக்காரர்கள், யாரும் இவர்களிடம் ஏமாந்துவிடாதீர்கள்” என்று எச்சரிக்கிறார்.

    பின்னர் அந்த பயணி தனக்கு நேர்ந்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார், “நான் இப்போது பெங்களூரு விமான நிலையத்தில் இருக்கிறேன். கடந்த ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு ஏமாற்றுக்காரர்களை நான் சந்தித்துவிட்டேன். முதலில் வந்த நபர், தனது மொபைல் போன் மூலம் தனக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து தருமாறு உதவி கேட்டார். தனக்கு பணம் எதுவும் தேவையில்லை, டிக்கெட் மட்டும் புக் செய்து கொடுத்தால் போதும் என்றார். ஆனால், அவரது முகபாவனையை வைத்தே அவர் மோசடிக்காரன் என்பதைப் புரிந்துகொண்டு அங்கிருந்து விரட்டினேன்.

    சற்று நேரத்திற்குப் பிறகு, மற்றொரு இளைஞன் என்னை அணுகினான். அவனது கையில் ஒரு போர்டிங் பாஸ் இருந்தது, அதில் சில க்யூஆர் கோடுகள்   ஒட்டப்பட்டிருந்தன. தன்னால் பணப்பரிவர்த்தனை செய்ய முடியவில்லை என்றும், தனக்காக அந்த பேமெண்ட்டை முடித்துக் கொடுத்தால் பின்னர் பணத்தை அனுப்பிவிடுவதாகவும் கூறினான். இதுவும் ஒரு மோசடி என்பதை உணர்ந்து நான் அவனை சத்தமிட்டதும் அவனும் அங்கிருந்து தப்பியோடிவிட்டான்” என்று தெரிவித்துள்ளார்.

    மீண்டும் முதலாவது நபர் அந்த பயணியின் கண்ணில் பட்டபோது, பயணி அவரை வீடியோ எடுக்கத் தொடங்கியுள்ளார். “ஏன் என்னை வீடியோ எடுக்கிறாய்?” என்று அந்த நபர் கேட்க, “வா போலீசிடம் போகலாம்” என்று பயணி கூறிய அடுத்த நொடி, போலீஸ் என்ற வார்த்தையைக் கேட்டதும் அந்த ஆசாமி அங்கிருந்து தலைதெறிக்க ஓடியுள்ளார்.

    இந்த வீடியோவின் தலைப்பில், “பெங்களூரு விமான நிலையத்தில் மோசடி ஆசாமிகள் எச்சரிக்கை! இந்த இருவருமே எனது மொபைல் போனை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே அணுகினர். யாரும் உங்களுடைய போனை மற்றவர்களிடம் கொடுக்காதீர்கள், அதேபோல தெரியாத எந்த ஒரு க்யூஆர் கோடையும் ஸ்கேன் செய்யாதீர்கள்” என்று அந்த பயணி பதிவிட்டுள்ளார்.

    தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த பல நெட்டிசன்கள், இது போன்ற க்யூஆர் கோடு மற்றும் போர்டிங் பாஸ் மோசடிகள் டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களிலும் பரவலாக நடந்து வருவதாகத் தங்களின் ஆதங்கங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

    Bengaluru Airport just one hour passenger viral video Scammers Two fraudsters
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகத்தாரில் பயங்கரம்!. வெடித்து சிதறிய எரிவாயு ஆலை!. 18 பேர் மாயம்; 54 பேர் காயம்!
    Next Article பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: NIA குற்றப்பத்திரிகையில் வெளியான பகீர் தகவல்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    சட்டசபையில் எங்களுக்கு பேச்சு உரிமை கொடுக்கல..!! வெளிநடப்பு செய்த இபிஎஸ் பகீர் குற்றச்சாட்டு..!!

    June 22, 2026

    தவெகவில் உட்கட்சி மோதல்: சிவகாசியில் அமைச்சர்கள் இடையே பனிப்போர்..!! நடந்தது என்ன..??

    June 22, 2026

    முதல்வர் விஜய் பிறந்தநாள்..!! பால் குடம் எடுத்த பெண்கள்..!! படவேட்டம்மன் கோயிலில் பாலாபிஷேகம்..!!

    June 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டசபையில் எங்களுக்கு பேச்சு உரிமை கொடுக்கல..!! வெளிநடப்பு செய்த இபிஎஸ் பகீர் குற்றச்சாட்டு..!!

    தவெகவில் உட்கட்சி மோதல்: சிவகாசியில் அமைச்சர்கள் இடையே பனிப்போர்..!! நடந்தது என்ன..??

    முதல்வர் விஜய் பிறந்தநாள்..!! பால் குடம் எடுத்த பெண்கள்..!! படவேட்டம்மன் கோயிலில் பாலாபிஷேகம்..!!

    திருவள்ளூர் வாயு கசிவு விவகாரம்..!! சட்டசபையில் எதிர்க்கட்சியினர் அமளி..!!

    ரயிலில் ஒன்று… ஆம்புலன்ஸில் ஒன்று!. ஒடிசாவை நெகிழ வைத்த ‘மிராக்கிள்’ பிரசவம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.