Close Menu
    What's Hot

    8 அடி 10 அங்குல நீள முடி!. கின்னஸ் சாதனை படைத்த உத்தரகண்ட் பெண்!

    கரூரில் 31 பேரின் அரசு பணி ரத்து.. ஆக.14-ல் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு விசாரணை!

    ரூ.60 கோடி நில பத்திரப்பதிவு மோசடி.. மீனாட்சி அம்மன் கோயில் விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சிட்கோ நில மோசடி வழக்கு!. முன்னாள் அமைச்சர் மா.சுப்ரமணியனுக்கு செக்!. சிறப்பு நீதிமன்றம் அதிரடி!
    Featured

    சிட்கோ நில மோசடி வழக்கு!. முன்னாள் அமைச்சர் மா.சுப்ரமணியனுக்கு செக்!. சிறப்பு நீதிமன்றம் அதிரடி!

    Editor web3By Editor web3August 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Minister Ma Subramanian
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசுக்குச் சொந்தமான சிட்கோ நிலத்தைப் போலியான ஆவணங்கள் மூலம் முறைகேடாக அபகரித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், சென்னை மாநகர முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இந்த நிலத்தைத் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றியதாகச் சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

    உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், மா.சுப்பிரமணியன் மீது மோசடி, கூட்டுச் சதி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சென்னையில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவை எதிர்த்து மா.சுப்பிரமணியன் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் தள்ளுபடி செய்தது.

    இதனைத் தொடர்ந்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.சஞ்சய் பாபா முன்னிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்தார். தங்களது மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறு என்றும், அவற்றை மறுப்பதாகவும் இருவரும் தெரிவித்தனர்.

    இதையடுத்து, இருவர் மீதும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்த நீதிபதி, வழக்கின் சாட்சி விசாரணையை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

    Former Minister Ma subramanian SIDCO land scam Special Court
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleFCRA திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு.. மத்திய அரசுக்கு மு.க ஸ்டாலின் முக்கிய கோரிக்கை!!
    Next Article நடிகை த்ரிஷாவின் அடுத்த அதிரடி? தவெகவுடன் இணைப்பா.. மதுரை சம்பவம் சொல்வது என்ன?
    Editor web3
    • Website

    Related Posts

    8 அடி 10 அங்குல நீள முடி!. கின்னஸ் சாதனை படைத்த உத்தரகண்ட் பெண்!

    August 8, 2026

    கரூரில் 31 பேரின் அரசு பணி ரத்து.. ஆக.14-ல் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு விசாரணை!

    August 8, 2026

    ரூ.60 கோடி நில பத்திரப்பதிவு மோசடி.. மீனாட்சி அம்மன் கோயில் விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது!!

    August 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    8 அடி 10 அங்குல நீள முடி!. கின்னஸ் சாதனை படைத்த உத்தரகண்ட் பெண்!

    கரூரில் 31 பேரின் அரசு பணி ரத்து.. ஆக.14-ல் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு விசாரணை!

    ரூ.60 கோடி நில பத்திரப்பதிவு மோசடி.. மீனாட்சி அம்மன் கோயில் விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது!!

    தவெகவினருக்கு சிக்கல்.. ஆன்லைன் பண மோசடி வழக்கில் 3 பேர் கைது! ரூ.200 கோடி பின்னணியா?

    உத்தரகண்டில் வீடு கட்டும் கனவு!. நள்ளிரவில் ரிஷப் பந்த் விடுத்த கோரிக்கை!. பச்சைக்கொடி காட்டிய முதல்வர்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.