Close Menu
    What's Hot

    பிரதமர் இல்லம் நோக்கி பேரணி: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அதிரடி கைது! 

    சிக்கிமில் நிலச்சரிவால் சுரங்கம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு! மீட்புப் பணிகள் தீவிரம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்: காவல்துறையின் தடியடி தொடர்பான பொதுநல வழக்கு நாளை விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தலைமைச் செயலகத்தில் Enjoy Enjami தெருக்குரல் அறிவு அதிரடி கைது… என்ன நடந்தது?
    Featured

    தலைமைச் செயலகத்தில் Enjoy Enjami தெருக்குரல் அறிவு அதிரடி கைது… என்ன நடந்தது?

    editor5By editor5July 21, 2026Updated:July 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 38 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு தலைமைச் செயலகம் முன்பு இன்று காலை பிரபல ராப் பாடகர் அறிவு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் உடனடியாக சுற்றி வளைத்து கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இன்று காலை தலைமைச் செயலகத்தை நோக்கி செல்ல முற்பட்ட அறிவு, அங்கு திடீரென நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பத் தொடங்கினார். “நீட் தேர்வை ரத்து செய்! முதலமைச்சர் விஜய் நீட் எதிர்ப்புக்கு குரல் கொடுக்க வேண்டும்!” என முழக்கமிட்ட அவர், மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் இத்தேர்வுக்கு எதிராக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து அங்கிருந்து அகற்றினர்.

    இந்நிலையில், டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. நேற்று நடைபெற்ற பேரணியின்போது போலீசார் தடியடி நடத்தியதுடன் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி மாணவர்களை கலைத்தனர். பல மாணவர்கள் காயமடைந்தனர். மேலும், சிலர் பாராளுமன்றத்திற்குள் நுழைய முயற்சித்ததால் அங்கும் பதற்றம் ஏற்பட்டது.

    நீட் தேர்வுக்கான எதிர்ப்பு அலையானது நாடு முழுவதும் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் இத்தகைய போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. மாணவர்களின் உயிரிழப்புகள் மற்றும் மன உளைச்சலை சுட்டிக்காட்டி பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். பாடகர் அறிவின் இந்த நடவடிக்கை மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    போலீசார் அறிவை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ள நிலையில், அவருக்கு எதிராக எந்தப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை. நீட் தேர்வு விவகாரம் தொடர்ந்து நாட்டின் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

    arivu arrest singer
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெங்கு தடுப்பில் புதிய மைல்கல்..!! முதல் தடுப்பூசிக்கு மத்திய அரசு கிரீன் சிக்னல்..!!
    Next Article நீட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!. பிரதமர் மோடி உறுதி!
    editor5

    Related Posts

    பிரதமர் இல்லம் நோக்கி பேரணி: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அதிரடி கைது! 

    July 21, 2026

    சிக்கிமில் நிலச்சரிவால் சுரங்கம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு! மீட்புப் பணிகள் தீவிரம்!

    July 21, 2026

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்: காவல்துறையின் தடியடி தொடர்பான பொதுநல வழக்கு நாளை விசாரணை

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரதமர் இல்லம் நோக்கி பேரணி: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அதிரடி கைது! 

    சிக்கிமில் நிலச்சரிவால் சுரங்கம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு! மீட்புப் பணிகள் தீவிரம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்: காவல்துறையின் தடியடி தொடர்பான பொதுநல வழக்கு நாளை விசாரணை

    “நீட் பிரச்சனையில் இடைக்கால தீர்வே தவெக நிலைப்பாடு”

    களம் காணும் காங்கிரஸ்… கண்டு கொள்ளாத திமுக – நீட் எதிர்ப்பில் இரட்டை வேடமா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.