சென்னையிலிருந்து சாய்நகர் சீரடி விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு தமிழக முதல்வர் வந்தடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. காட்பாடியில் இருந்து வேலூரில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை வரை பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து வரவேற்பு அளித்தனர்.
வழிநெடுகிலும் பல்வேறு இடங்களில் நடனங்கள் பாட்டு கச்சேரிகள் என அமைக்கப்பட்டு இருந்தது அனைத்தையும் முதலமைச்சர் பார்வையிட்டுக் கொண்டு வாகனத்தில் வந்தார். திமுகவினர் மேள தாளங்களுடன் மலர் தூவி வரவேற்றனர். புதிய பேருந்து நிலையம் அருகே வாகனத்தில் இருந்து இறங்கி சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் மாவட்ட திமுக அலுவலகம் வரை நடந்து சென்று பொது மக்களை சந்தித்தார்.
பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்ட அவர் மகளிரிடம் கைகுலுக்கி சிரித்து பேசினார்.
பின்னர் வேலூரில் ரூபாய் 197 கோடியே 81 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பென்ட் லென்ட் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
3,77,263.76 சதுர அடி பரப்பில், தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன்கூடிய உயர் சிகிச்சை பல்நோக்கு மருத்துவமனையாக இது கட்டப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில், 560 படுகைகள் , 11 அறுவை சிகிச்சைகள் அரங்கங்கள் மற்றும் பிரசவ அறை, மகப்பேறு அவசர சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை அறுவையரங்கம், மருந்தகம், மத்திய கிருமி நீக்க சேவைகள் துறை என பல துறைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சேர்க்காடு, திருவலம், ஒடுக்கத்தூர், ஊசூர், பொன்னை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார். மேலும், லட்சுமிபுரம், தொரப்பாடி, பேர்ணாம்பட்டு, அணைக்கட்டு மகமதுபுரம் ஆகிய 9 இடங்களில் நகர்ப்புற சுகாதார நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, ஆர்.காந்தி என பலர் கலந்து கொண்டனர்.
பின்பு இங்கிருந்து விருதுநகர் மாளிகை சென்றா. மாலையில் அணைக்கட்டு பகுதியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் திருவுருவு சிலை மற்றும் கலைஞர் அறிவாலயம் நூலகம் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.