வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜய் தலைமையிலான  தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அரசியல் மற்றும் அரசுப் பணிகளில் அண்மைக்காலமாகத் தீவிரமாகச் செயலாற்றி வந்ததால் அவருக்குக் கடுமையான உடல் சோர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அமைச்சர் செங்கோட்டையனின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் விசாரித்தபோது, அவரது உடல்நிலை தற்போது சீராகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் ஓட்டங்களின் காரணமாக ஏற்பட்ட உடல் சோர்வே இதற்குக் காரணம் என்பதால், அவர் சில நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர் விரைவில் குணமடைந்து மக்கள் பணிகளுக்குத் திரும்புவார் என அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version