Close Menu
    What's Hot

    ‘பாஸ் ஸ்கேம்’ மோசடி: ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் ரூ.38.5 லட்சம் பறிக்க முயற்சி!

    “கவர்ச்சி மாயையை நம்பி வாக்களித்த மக்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர்”

    நேரில் தவெக அரசுக்கு பாராட்டு; அறிக்கையில் திட்டு- அன்புமணியின் புதிர் அரசியல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மேற்கு வங்கத்தில் சூப்பர் எமெர்ஜென்சி ; திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம்
    Featured

    மேற்கு வங்கத்தில் சூப்பர் எமெர்ஜென்சி ; திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 west
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேற்கு வங்க மாநிலம் பாருயிபூரில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு செல்ல முயன்ற திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த விவகாரம் குறித்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டோலா சென், “இது வெறும் அவசரநிலை அல்ல; ‘சூப்பர் எமர்ஜென்சி‘. தற்போது நடைபெறுவது முற்றிலும் தவறானது” என்று தெரிவித்தார்.

    மற்றொரு எம்.பி. பிரதிமா மொண்டல், “முன்னாள் முதலமைச்சரையே சம்பவ இடத்துக்கு செல்ல அனுமதிக்காதது ஜனநாயகத்தின் படுகொலை. இதை வன்மையாக கண்டிக்கிறோம். மம்தா பானர்ஜியைப் பார்த்து பாஜகவும் தற்போதைய அரசும் அஞ்சுகின்றன. அவர் அங்கு சென்றால் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அவருக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்பதால் அவரை தடுத்துள்ளனர்” என்று குற்றம்சாட்டினார்.

    இதற்கிடையில், பிமான் பானர்ஜி, டோலா சென் மற்றும் பிரதிமா மொண்டல் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் குழு, மம்தா பானர்ஜியின் இல்லத்திலிருந்து பாருயிபூருக்கு புறப்பட்டுச் சென்றது.

    முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக கூறி ஆட்சிக்கு வந்த பாஜக, அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியுள்ளது. அரசியல் செல்வாக்கு சட்டத்தை விட மேலோங்கி நிற்பதாக மக்கள் நினைக்கும் சூழல் உருவாகியுள்ளது. பாருயிபூர் சம்பவம் அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது” என்று குற்றம்சாட்டினார்.

    மேலும், “சம்பவம் நடந்தபோது பாஜக தரப்பில் எந்த எதிர்ப்பும் இல்லை. பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையும் இல்லை. நீதி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் நிலை உருவானால், பாதிக்கப்படுவது சமூகமே” என்றும் அவர் விமர்சித்தார்.

    Super Emergency TMC Trinamool Congress West bengal
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமெக்ஸிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து!. பட்டாசு சதிக்கு மைதானத்தில் பதிலடி!
    Next Article அயோத்தி ராமர் கோயிலில் நாள்தோறும் ரூ.8லட்சம் நன்கொடை திருட்டு..! வெளியான அதிர்ச்சி தகவல்..!
    Editor TN Talks

    Related Posts

    ‘பாஸ் ஸ்கேம்’ மோசடி: ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் ரூ.38.5 லட்சம் பறிக்க முயற்சி!

    July 6, 2026

    “கவர்ச்சி மாயையை நம்பி வாக்களித்த மக்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர்”

    July 6, 2026

    நேரில் தவெக அரசுக்கு பாராட்டு; அறிக்கையில் திட்டு- அன்புமணியின் புதிர் அரசியல்!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘பாஸ் ஸ்கேம்’ மோசடி: ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் ரூ.38.5 லட்சம் பறிக்க முயற்சி!

    “கவர்ச்சி மாயையை நம்பி வாக்களித்த மக்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர்”

    நேரில் தவெக அரசுக்கு பாராட்டு; அறிக்கையில் திட்டு- அன்புமணியின் புதிர் அரசியல்!

    தமிழகத்தில் 2,000 புதிய மின்சார ஏசி பேருந்துகள்…  எந்தெந்த நகரங்களில் இயக்கப்படும்?

    மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.