ரஜினிகாந்த் நடிக்கும் 173வது படத்திற்கு ‘தர்மன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 173’ என பெயரிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தநிலையில், ‘தலைவர் 173’ படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசன், ரஜினிகாந்த், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று படம் தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். படத்தின் புதிய போஸ்டரில் ரஜினிகாந்த் மருத்துவர் தோற்றத்தில் இருப்பது போன்று உள்ளதால், கதைக்களம் குறித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version