Close Menu
    What's Hot

    ” வைகோவுக்கு சங்கடம்… திருமாவுக்கு ஆச்சரியம்…” – கோவளம் கூட்டத்தில் நடந்தது என்ன?

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: பார் உரிமையாளர்கள் எச்சரிக்கை!

    “நச்சுத் திட்டம் நலத்திட்டமாக மாறியது எப்படி?” – முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழகத்தின் மதச்சார்பற்ற தன்மையைக் காக்கவே தவெக-விற்கு ஆதரவு – சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் விளக்கம்
    Featured

    தமிழகத்தின் மதச்சார்பற்ற தன்மையைக் காக்கவே தவெக-விற்கு ஆதரவு – சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் விளக்கம்

    Editor TN TalksBy Editor TN TalksMay 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 vijay rajesh
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு  காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பது குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. செ. ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ. விளக்கம் அளித்துள்ளார்.

    தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தை காங்கிரஸ் ஆதரிப்பது குறித்துச் சில விமர்சனங்கள் திட்டமிட்டு முன்வைக்கப்படுகின்றன.

    குறிப்பாக, பதவி ஆசைக்காகவும் தமிழக மக்களுக்குத் துரோகம் இழைக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் சிலர் முதுகில் குத்திவிட்டதாக கூறுவதை இந்திய தேசிய காங்கிரஸ் முற்றிலுமாக மறுக்கிறது.

    தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே பல்வேறு அரசியல் அழைப்புகள் எங்களுக்கு வந்ததை நாடறியும். இருப்பினும், மதவாத சக்திகளுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணியில் பயணிப்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெற காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் கடுமையாக உழைத்தனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    ஜனநாயக நாட்டில் மக்களின் எண்ண ஓட்டம் சில நேரங்களில் எதிர்பாராத தேர்தல் முடிவுகளைத் தருகிறது. அந்த வகையில், தமிழக மக்களின் தற்போதைய மனநிலை மற்றும் ஜனநாயக முடிவுகளுக்குத் தலைவணங்கி, மாநிலத்தின் எதிர்கால நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம்.

    தமிழக வெற்றிக் கழகம் தன்னை ஒரு மதச்சார்பற்ற கட்சியாகவே முன்னிறுத்திச் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அக்கட்சியின் தலைவர் விஜய், பெருந்தலைவர் காமராஜர் அவர்களைத் தனது கொள்கைத் தலைவராக ஏற்று, அவர் காட்டிய வழியில் சமூக நீதிக்காகத் தொடர்ச்சியாகப் பயணிப்போம் என்கிற கொள்கையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

    பெருந்தலைவர் காமராஜரின் லட்சியங்களை உள்வாங்கி, சமூக நீதிப் பாதையில் பயணிப்பதாக அறிவித்துள்ள ஒரு இயக்கத்தை ஆதரிப்பது, தமிழகத்தில் மதச்சார்பற்ற விழுமியங்களை வலுப்படுத்தும் என்று காங்கிரஸ் நம்புகிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் மதவாத சக்திகள் தமிழகத்திற்குள் எந்தக் காலத்திலும் காலூன்றி விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் சமரசமற்ற உறுதியைக் கொண்டுள்ளது.

    மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும், தமிழகத்தில் ஒரு வலிமையான மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்களின் ஒரே நோக்கம். இதில் தமிழக மக்களுக்குத் துரோகம் இழைக்கப்படுவதாகக் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது.

    தமிழக மக்களின் நலனையும், மாநிலத்தின் அமைதியையும் கருத்தில் கொண்டு, மதவாத சக்திகளைத் தனிமைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இத்தகைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டே இந்த ஆதரவு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி என்றும் மதவாதத்திற்கு எதிராகவும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு ஆதரவாகவும், சமூக நீதியைக் காக்கவும் தனது பயணத்தைத் தொடரும்.

    இவ்வாறு செ.ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய்யிடம் அடுக்கடுக்கான கேள்விகள்!. பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பு?
    Next Article கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுக – தவாக வேல்முருகன் கோரிக்கை
    Editor TN Talks

    Related Posts

    ” வைகோவுக்கு சங்கடம்… திருமாவுக்கு ஆச்சரியம்…” – கோவளம் கூட்டத்தில் நடந்தது என்ன?

    July 1, 2026

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: பார் உரிமையாளர்கள் எச்சரிக்கை!

    July 1, 2026

    “நச்சுத் திட்டம் நலத்திட்டமாக மாறியது எப்படி?” – முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ” வைகோவுக்கு சங்கடம்… திருமாவுக்கு ஆச்சரியம்…” – கோவளம் கூட்டத்தில் நடந்தது என்ன?

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: பார் உரிமையாளர்கள் எச்சரிக்கை!

    “நச்சுத் திட்டம் நலத்திட்டமாக மாறியது எப்படி?” – முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

    வசூல் வேட்டை!. அருந்ததி சாதனையை முறியடித்த சமந்தாவின் ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம்!

    அரசுப் பள்ளி ஆசிரியரின் அநாகரிக செயல்!. மதுபோதையில் பொதுவெளியில் ரகளை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.