Close Menu
    What's Hot

    125 நாள் வேலைத் திட்டம் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமல்: மத்திய அரசு தீவிர ஏற்பாடு!

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஐபிஎல்-லில் மிரட்டிய சூர்யவன்ஷி!. 15 வயதில் இந்திய டீமில் ‘என்ட்ரி!. கிரிக்கெட் உலகே வியக்கும் அசுர வளர்ச்சி!
    Featured

    ஐபிஎல்-லில் மிரட்டிய சூர்யவன்ஷி!. 15 வயதில் இந்திய டீமில் ‘என்ட்ரி!. கிரிக்கெட் உலகே வியக்கும் அசுர வளர்ச்சி!

    Editor web3By Editor web3June 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    U19 Asia Cup Vaibhav Suryavanshi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஒட்டுமொத்த உலகையே தனது அசாத்திய பேட்டிங் திறமையால் திரும்பிப் பார்க்க வைத்த 15 வயதே ஆன  வைபவ் சூர்யவன்ஷி, இந்திய டி20 அணியில் முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

    அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக ஜூன் 26 முதல் தொடங்கவுள்ள டி20 தொடருக்கான இந்திய இளம்படையில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய சர்வதேச கிரிக்கெட் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள மிக இளம் வயது வீரர் என்ற பெருமையையும், புதிய வரலாற்றையும் வைபவ் சூர்யவன்ஷி தன்வசப்படுத்தியுள்ளார்.

    கடந்த ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி, மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளைப் பறக்கவிட்டு ரன் வேட்டை நடத்தினார். உலகின் தலைசிறந்த சர்வதேச பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை மிகச் சாதாரணப் பந்துவீச்சைப் போல எதிர்கொண்ட அவர், தொடர் முழுவதும் அபாரமாக விளையாடி, அதிக ரன்கள் குவித்த வீரருக்கான மதிப்பிற்குரிய ‘ஆரஞ்சு தொப்பி’யை வென்று சாதனை படைத்தார். மிக இளம் வயதில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற உலக சாதனையைத் படைத்த போதே, இவர் விரைவில் இந்திய அணியின் கதவைத் தட்டுவார் என்று ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் கணித்திருந்தது.

    அஜித் அகர்கர் தலைமையிலான பிசிசிஐ தேர்வுக் குழு, சூர்யகுமார் யாதவ் போன்ற சீனியர் வீரர்களை விடுவித்து விட்டு, எதிர்கால இந்திய டி20 அணியைக் கட்டமைக்கும் நோக்கில் அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. அந்த வகையில், ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்த புதிய இளம்படையில் வைபவ் சூர்யவன்ஷிக்கு முக்கியப் பங்கு அளிக்கப்பட்டுள்ளது. தனது அதிரடியான பேட்டிங் பாணி மற்றும் முதிர்ச்சியான ஆட்டத்திறன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்குப் பெரிய பலமாக மாறுவார் என்ற பெரும் எதிர்பார்ப்புடன், ஜூன் 26-ல் தொடங்கவுள்ள வெளிநாட்டுத் தொடர்களில் களம் காண இந்த 15 வயது இளம் புயல் தயாராகி வருறார்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகடலூர் : மீன்பிடிக்க சென்று மாயமான 3 மீனவர்கள்..! உறவினர்கள் போராட்டம்..!
    Next Article ஆப்கன் டெஸ்டில் ‘மினி GT’ வீரர்கள்!. இந்திய அணியின் பிளேயிங் லெவனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
    Editor web3
    • Website

    Related Posts

    125 நாள் வேலைத் திட்டம் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமல்: மத்திய அரசு தீவிர ஏற்பாடு!

    June 20, 2026

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    June 19, 2026

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    125 நாள் வேலைத் திட்டம் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமல்: மத்திய அரசு தீவிர ஏற்பாடு!

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.