ந்தியாவின் முன்னணி ஏற்றுமதி மாநிலங்களில் அதிகபட்ச ஏற்றுமதி வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பது தமிழ்நாட்டின் தொழில் வலிமைக்கு கிடைத்த அங்கீகாரம் என்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி மாநிலங்களில் அதிகபட்ச ஏற்றுமதி வளர்ச்சியை தமிழ்நாடு பதிவு செய்திருப்பது, பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்ட தொழில் அடித்தளத்தின் வெற்றி எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் ஏற்றுமதி சாதனை என்பது ஒரே நாளில் உருவானதல்ல என்றும், தொழில்முனைவோர், தொழிலாளர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME), ஏற்றுமதியாளர்கள் ஆகியோரின் கடின உழைப்பும், பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக பின்பற்றப்பட்ட தொழில் கொள்கைகளும், வலுவான நிறுவன அடித்தளங்களுமே இந்த வெற்றிக்குக் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் முன்னணி ஏற்றுமதி மாநிலங்களில் தமிழ்நாடு அதிகபட்ச வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பது ஒரு முக்கிய மைல்கல் மட்டுமல்ல; அடுத்த கட்ட வளர்ச்சிக்கான வலுவான அடித்தளமும் ஆகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் தலைமையில், இந்தியாவின் உற்பத்தித் துறையில் முன்னணி மாநிலமாக இருப்பதுடன், சேவைகள், தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), வடிவமைப்பு (Design), புதுமை (Innovation) ஆகிய துறைகளிலும் உலகளாவிய சக்தியாக தமிழ்நாட்டை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார்.

மேலும், 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்றும் இலக்கை அடைய புதுமை, உயர்ந்த மதிப்புக் கூட்டல், உற்பத்தித் திறன் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டு அரசு செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version