டாஸ்மாக் மதுபான பார்களுக்கான கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை டாஸ்மாக் பார்களில் விற்பனை செய்யக்கூடாது. மேலும் பீடி, சிகரெட் போன்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்களில் விற்கப்படும் குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் ஐஎஸ் தரச் சான்று பெற்றதாக இருக்க வேண்டும், முக்கியமாக மதுக்கடைகள் செயல்படும் நேரத்தில் மட்டுமே மதுபான பார்கள் செயல்பட வேண்டும் எனவும் மற்ற நேரங்களில் மதுபான பார்கள் செயல்படக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.
மதுபான பார்களில் மது பாட்டில்களை விற்பனை செய்யக் கூடாது எனவும் கூடுதல் விலைகளில் நொறுக்கு தீனிகளை விற்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகளை மீறினால் பார்களுக்கு உடனடியாக சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
