Close Menu
    What's Hot

    உருகுதே… மருகுதே… ஒரே பார்வையாலே… இசை அசுரன் ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள் இன்று!

    இந்தியாவில் நுழைந்தது எல் நினோ!. மிக மோசமான மழைப்பொழிவு?. வறட்சி ஏற்படும் அபாயம்!

    இந்தியா vs ஆப்கானிஸ்தான்!. இன்று முதல் ஒருநாள் போட்டி; ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»டாஸ்மாக் ஊழியர்கள் 3 நாள் ஸ்ட்ரைக்!. ரூ.10 கோடி நஷ்டம்!. அதிகாரிகளே மது விற்ற அதிர்ச்சி!
    Featured

    டாஸ்மாக் ஊழியர்கள் 3 நாள் ஸ்ட்ரைக்!. ரூ.10 கோடி நஷ்டம்!. அதிகாரிகளே மது விற்ற அதிர்ச்சி!

    Editor web3By Editor web3May 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    namakkal tasmac strike
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், மாற்றுப் பணி உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை முன்வைத்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 159 அரசு மதுபானக் கடைகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கடந்த மூன்று நாட்களாகப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு மாநில வாணிபக் கழக அலுவலகம் முன்பாக அவர்கள் தொடர்ந்து காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    டாஸ்மாக் ஊழியர்களின் இந்தத் தொடர் கடையடைப்புப் போராட்டத்தால், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் கடந்த மூன்று நாட்களில் அரசுக்குச் சுமார் 10 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வருவாய் இழப்பைத் தடுக்கும் நோக்கில், இன்று மாலை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மற்றும் இடைநிலை அதிகாரிகள் நேரடியாகக் களத்தில் இறங்கி, நாமக்கல் பகுதியில் உள்ள 5 கடைகளைத் திறந்து மது விற்பனையைத் தொடங்கினர்.

    கடைகள் திறக்கப்பட்ட விபரம் தெரிந்ததும், மதுப்பிரியர்கள் சாலையில் நீண்ட வரிசையில் சாரை சாரையாகக் திரண்டனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் படுஜோராக விற்பனை நடந்த நிலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட டாஸ்மாக் அலுவலக உத்தரவின்பேரில் தற்காலிகமாக விற்பனை நிறுத்தப்பட்டது. ஆங்காங்கே நின்றிருந்த மதுப்பிரியர்களைப் போலீசார் அறிவுறுத்தி கலைந்து போகச் செய்தனர். ஊழியர்கள் போராடி வரும் நிலையில், அதிகாரிகளை வைத்து அரசு மது விற்றது இப்பகுதியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என டாஸ்மாக் ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசி.வி.சண்முகத்தை தன் பக்கம் இழுக்கிறதா தவெக..?? அவருக்கு இந்த முக்கிய பதவியாம்..!!
    Next Article கர்நாடகா: டிகே சிவக்குமார் தலைமையில் 4 துணை முதல்வர்கள்..?? சித்தராமையா மகனுக்கு முக்கிய பதவி?
    Editor web3
    • Website

    Related Posts

    உருகுதே… மருகுதே… ஒரே பார்வையாலே… இசை அசுரன் ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள் இன்று!

    June 13, 2026

    இந்தியாவில் நுழைந்தது எல் நினோ!. மிக மோசமான மழைப்பொழிவு?. வறட்சி ஏற்படும் அபாயம்!

    June 13, 2026

    இந்தியா vs ஆப்கானிஸ்தான்!. இன்று முதல் ஒருநாள் போட்டி; ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உருகுதே… மருகுதே… ஒரே பார்வையாலே… இசை அசுரன் ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள் இன்று!

    இந்தியாவில் நுழைந்தது எல் நினோ!. மிக மோசமான மழைப்பொழிவு?. வறட்சி ஏற்படும் அபாயம்!

    இந்தியா vs ஆப்கானிஸ்தான்!. இன்று முதல் ஒருநாள் போட்டி; ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு!

    மகளிர் டி20 உலகக் கோப்பை!. இதுவே முதல்முறை!. இங்கிலாந்து அணி வரலாற்றுச் சாதனை!

    பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயணம்!. G7 மாநாட்டில் பங்கேற்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.