பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற 79-வது கான்ஸ் சர்வதேச திரைப்பட விழாவின் (Cannes 2026) சிவப்பு கம்பளத்தில், உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது வழக்கமான கம்பீரத்துடனும் தனித்துவமான ஃபேஷன் தேர்வினாலும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் அமித் அகர்வால் வடிவமைத்த ‘அபிஸ் ப்ளூ’ (Abyss Blue) எனப்படும் மினுமினுக்கும் நள்ளிரவு நீல நிற (Midnight Blue) கவுன் உடையில் ஐஸ்வர்யா ராய் வலம் வந்தார்.

இந்த ஆடையில் உள்ள நுணுக்கமான கிரிஸ்டல் வேலைப்பாடுகள் (Crystal Vein Embroidery) மற்றும் வடிவமைப்பை உருவாக்குவதற்கு 1,500 மணி நேரத்திற்கும் மேலாகியுள்ளது.

தோள்பட்டைகளில் சிறகுகள் போன்ற அமைப்பும், கைகளில் அலை அலையாகக் கவிழ்ந்திருக்கும் நீளமான துணியும்இந்த ஆடைக்கு ஒரு புதிய ‘ஃப்யூச்சரிஸ்டிக்’  மற்றும் ராயல் தோற்றத்தைத் தந்தன. ஐஸ்வர்யா ராயின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் (SM) படுவேகமாக வைரலாகி வருகின்றன.

வைரல் ரெட் கார்பெட் லுக் மட்டுமின்றி, விழாவின் தலைவர் மற்றும் இயக்குநருடன் அவர் இருக்கும் படங்களும் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.  ஒவ்வொரு ஆண்டும் கான்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராயின் வருகைக்காகவே உலகமே காத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

கடந்த 2002-ம் ஆண்டு ‘தேவதாஸ்’ திரைப்படத்திற்காக முதன்முறையாக கான்ஸ் விழாவில் கால்பதித்த ஐஸ்வர்யா ராய், அதன் பிறகு லோரியல் (L’Oréal) பிராண்ட் தூதராக ஒவ்வொரு ஆண்டும் இந்தியா சார்பில் தவறாமல் கலந்துகொண்டு வருகிறார். இந்த ஆண்டும் தனது மகள் ஆராத்யாவுடன் கான்ஸ் சென்று, தனது 24 ஆண்டு கால பாரம்பரியப் பயணத்தை மீண்டும் ஒருமுறை அழகிய வரலாற்றுப் பக்கமாக மாற்றியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version