Close Menu
    What's Hot

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»ஐபிஎல் திருவிழா ஓவர்.. இனி டெஸ்ட் ஆட்டம்! புதுமுக வீரர்களுடன் களமிறங்கும் இந்திய இளம் படை!
    Featured

    ஐபிஎல் திருவிழா ஓவர்.. இனி டெஸ்ட் ஆட்டம்! புதுமுக வீரர்களுடன் களமிறங்கும் இந்திய இளம் படை!

    Editor web3By Editor web3June 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    India vs. Afghanistan Test
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி நாளை மீண்டும் டெஸ்ட் போட்டியில் களம் இறங்குகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவிந்திரா சிங் மைதானத்தில் நாளை (ஜூன் 6) தொடங்கும் இந்த ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 2025 நவம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய பிறகு, கடந்த 6 மாதங்களாக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. 2026-ஆம் ஆண்டில் இந்தியா விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். எனினும், இப்போட்டி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உட்பட்டது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணியின் இன்னிங்ஸை யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துணை கேப்டன் கே.எல்.ராகுல் ஆகியோர் தொடங்கவுள்ளனர். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகளில் 539 ரன்கள் குவித்த ராகுல், சமீபத்திய ஐபிஎல் தொடரிலும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக 593 ரன்கள் குவித்து நல்ல ஃபார்மில் உள்ளார். மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய ஜெய்ஸ்வால் 427 ரன்கள் எடுத்துள்ளார்.

    மூன்றாவது வரிசையில் களம் இறங்க சாய் சுதர்சன் மற்றும் தேவ்தத் படிக்கல் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும், ரஞ்சி கோப்பையில் உத்தரகாண்ட் அணிக்கு எதிராக 232 ரன்கள் உட்பட மொத்தம் 532 ரன்கள் குவித்த படிக்கல்லுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. கேப்டன் சுப்மன் கில் 4-வது இடத்திலும், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 5-வது இடத்திலும் களம் இறங்குவது உறுதியாகியுள்ளது.

    சமீபத்தில் முடிந்த ஐபிஎல் 2026 தொடர் ரிஷப் பண்ட்டிற்கு (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) சுமாரான சீசனாக அமைந்தது. இதனால் அவரது துணை கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டு கே.எல்.ராகுலிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், டெஸ்ட் கிரிக்கெட்டில் பண்ட்டின் சாதனை அசாத்தியமானது என்பதால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் அணியின் முக்கிய ஆல்-ரவுண்டர்களாக செயல்படுவர். ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால்,  ஹர்ஷ் துபே அல்லது ராஜஸ்தானின் மானவ் சுதர் ஆகிய இருவரில் ஒருவருக்கு நாளை டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கும் என உதவி பயிற்சியாளர் ரையான் டென் டோஸ்கேட் தெரிவித்துள்ளார்.

    ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், முகமது சிராஜ் வேகப்பந்து வீச்சை வழிநடத்துவார். இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக பிரசித் கிருஷ்ணா அல்லது பஞ்சாப்பின் குர்னூர் ப்ரார் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

    இதேபோல், ஹஷ்மதுல்லா ஷாஹிதி தலைமையில் ஆப்கானிஸ்தான் அணி களம் காண்கிறது. ரஹ்மானுல்லா குர்பாஸ், ரஹ்மத் ஷா, அஸ்மத்துல்லா ஒமர்சாய் போன்ற முக்கிய வீரர்கள் இந்திய அணிக்கு சவால் அளிக்கக் காத்திருக்கின்றனர்.

    இந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு, இவ்விரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. அதாவது, ஜூன் 14ம் தேதி 1-வது ஒருநாள் போட்டி (தர்மசாலா), ஜூன் 17ல் 2-வது ஒருநாள் போட்டி (லக்னோ), ஜூன் 20ல் 3-வது ஒருநாள் போட்டி (சென்னை). அனைத்து போட்டிகளும் மதியம் 1:30 மணிக்குத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிறுவனை சித்தரவதை செய்த கல்நெஞ்ச அங்கன்வாடி ஊழியர்..!! தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!!
    Next Article திருச்சி : தொடர் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு..!
    Editor web3
    • Website

    Related Posts

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    June 8, 2026

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    June 8, 2026

    ‘‘சிங்கப் பெண்’’ அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடக்கம்!

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    ‘‘சிங்கப் பெண்’’ அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடக்கம்!

    ’இந்தியா’ கூட்டணியில் காங்கிரசுக்கு எதிராக வெடித்த திருமா… திமுகவை கூல் பண்ணவா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.