கோவை மாவட்டம், சோமனூரை சேர்ந்த ரவிக்குமாரின் என்பவரின் மகன் வருண்காந்த் மனநலம் பாதித்தவர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சி முல்லை நகரில் உள்ள ’யுதிரா சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற தனியார் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். காப்பக நிர்வாகிகள் ஊழியர்கள் சேர்ந்து வருண் காந்தை அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் காப்பக நிர்வாகிகளான கிரிராம், ஷாஜுவின் தந்தை செந்தில் பாபு, நிதிஷ், பணியாளர்கள் ரங்கநாயகி, சதீஷ், ஷீலா ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
மேலும் தலைமறைவாக இருக்கும் காப்பக நிர்வாகிகள் லட்சுமணன், மனநல ஆலோசகர் கவிதா உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர். இதற்காக 3 தனிப்படைகள் அமைத்து தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் தேடுதல் நடக்கிறது. அதே நேரம் அவர்கள் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அவர்களின் போட்டோ, பாஸ்போர்ட் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
