வேலூர்மாவட்டம்,வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி விருதுகள் வழங்கும் விழா ஜூ 5 ஆம் தேதி சென்னையில் நடைபெறுவதாகவும் ஆகஸ்ட் 17-இல் தன்னுடைய பிறந்த நாளில் தமிழ் தேசிய மாநாடு நடைபெற உள்ளதாகவும், இந்த மாநாட்டுக்காக  மண்டல வாரியாக முன்னணி பொறுப்பாளர்களை சந்திக்கவுள்ளதாகவும் கூறினார்.

மதசார்பின்மையை பாதுகாப்பதில் விசிக உண்மையாக இருப்பதாகவும், தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் உறுதி படுத்தியுள்ளதாகவும் கூறியவர் அண்ணாமலை விவகாரத்துக்கு வந்தார்.

அண்ணாமலை பாஜகவிலிருந்து வெளியேறி அனுமதி பெற்று ஒரு இயக்கத்தை துவங்குகிறார். அவர் பாஜகவிலிருந்து வெளியேறுவது என்றால் செய்தியாளர்களுக்கு அறிவிப்பு செய்தால் போதும். ஆனால் அரசு அதிகாரி போல் பாஜகவிக்கு விலகல் கடிதம் கொடுத்து அனுமதி பெற்று அதன் பின்னர் புதிய இயக்கம் துவங்குகிறார் என்பது கவனிக்கப்பட வேண்டும். மதவாத அரசியல் எந்த அவதாரம் எடுத்தாலும் தமிழக மக்கள் கண்டுகொள்வார்கள் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து மேகதாது விவகாரம் குறித்த கேள்விக்கு, மேகதாதுவில் அணைகட்ட இந்திய ஒன்றிய அரசு அனுமதிக்க கூடாது என முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார். அதனை உறுதிபடுத்தவே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேகதாதுவில் அணைகட்டினால் தமிழகம் எந்த வகையில் பாதிக்கப்படும், விவசாயிகளும் மக்களும் கால்நடைகளும் எவ்வாறு பாதிக்கப்படும் என கவலை மேலோங்கி உள்ளது எனக் கூறியவர்,  அனைத்து கட்சிகளும் எவ்வளவு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் இதில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும்,  இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டுமென முதல்வருக்கு விசிக வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் மேகதாது அணை விவகாரத்தில், தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்தி காங்கிரஸ் முடிவு எடுத்துள்ளதாகவும்,  இதுதான் கடந்த கால வரலாறு எனவும், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் தமிழ்நாடு காங்கிரஸ் தமிழக மக்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பார்கள் எனவும் திருமாவளவன் கூறினார்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறித்த வினாவுக்கு, பாலியல் கொடுமைகள் பெண்கள் சிறுமிகள் பாதுகாப்பில் கூடுதல் கவணம் செலுத்த வேண்டுமென்ற பொறுப்புணர்வு முதல்வருக்கு இருக்கிறது என்பதை உறுதிபடுத்துவதுதான் சிங்கபெண் திட்டம் எனவே இதனை ஒட்டி அவர் தீவிரமாக வல்லுநர்களுடன் கலந்துபேசி தடுப்பு நடவடிக்கைகளை செய்வார் என நம்பிக்கையுடன் கூறினார்.

நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசி மாடுகளால்தான் சாப்பிட முடியும் என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார் என்றால் மக்களால் அதனை சாப்பிட முடியாததால் மாடுகளுக்கு தீனியாக போடுவதாக சொல்லியுள்ளார். நல்ல அரிசி போடுவது மக்களின் எதிர்பார்ப்பு திமுக அரசு மீது குறை சொல்வதை விட நல்ல அரிசியை அரசு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version