Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சூடுபிடிக்கும் தூத்துக்குடி லாக்கப் டெத் வழக்கு..!! தொடங்கியது பிரேத பரிசோதனை..!!
    Featured

    சூடுபிடிக்கும் தூத்துக்குடி லாக்கப் டெத் வழக்கு..!! தொடங்கியது பிரேத பரிசோதனை..!!

    editor5By editor5July 24, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 17 10
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில் கடந்த 17ஆம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விசாரணைக்காக தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    காவல் நிலையத்தில் விசாரணை முடிந்ததை தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அருணாச்சலத்திற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அருணாச்சலம் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காவல் நிலைய விசாரணையின் போது அருணாச்சலம் தாக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட காயங்களே அவரது உயிரிழப்புக்கு காரணம் என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர்கள், சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும், அருணாச்சலத்தின் மரணம் குறித்து நீதித்துறை நடுவர் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும், பிரேத பரிசோதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, அவரது உடலை பெற்றுக்கொள்ள மறுத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து, இன்று அருணாச்சலத்தின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு வரப்பட்டது. பரிசோதனை தொடங்குவதற்கு முன்பு அவரது தந்தை நாகராஜ் மற்றும் தம்பி சுடலைமணி உள்ளிட்ட உறவினர்கள் உடலை அடையாளம் காட்டினர்.

    தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜயராஜசேகர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    உறவினர்களின் கோரிக்கையை ஏற்று, அருணாச்சலத்தின் உடலில் மேற்கொள்ளப்படும் பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகின்றன. பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை விசாரணையின் முடிவுகளின் அடிப்படையிலேயே அவரது மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Arunachalam Death thoothukudi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக கோஷ்டி மோதலால் தேனியில் பதற்றம்.. எம்.எல்.ஏ. கார் கண்ணாடி உடைப்பு!
    Next Article ‘ஜன நாயகன்’ முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை!. எத்தனை கோடி தெரியுமா?
    editor5

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.