Close Menu
    What's Hot

    மோகன்லாலிடம் 10 யானைத் தந்தங்கள், 13 தந்தச் சிலைகள்

    விஜய் அரசை கவிழ்க்க திமுக சதி ; நாங்கள் காவல் அரணாக இருப்போம் – வைகோ

    ‘பாஸ் ஸ்கேம்’ மோசடி: ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் ரூ.38.5 லட்சம் பறிக்க முயற்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானம்
    Featured

    மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 congress
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. தலைமையிலும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான செ. ராஜேஷ்குமார் முன்னிலையிலும் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் மாணிக்கம் தாக்கூர் எம்.பிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வது,

    தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவை அளிக்க அரசியல் விவகாரக் குழு எடுத்த முடிவை வரவேற்பதோடு, காங்கிரசின் செ.ராஜேஷ்குமார், பெ.விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவிப்பது என தீர்மாங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலும், ஜூலை 15-ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளை  ஒரு வார காலம் கொண்டாடுவது, ‘நெஞ்சம் நிமிர், லஞ்சம் தவிர்” என்ற முழக்கத்துடன் மாவட்டம் முழுமையும் ‘ஊழல் ஒழிப்பு பிரச்சார இயக்கம்” நடத்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளை கேட்டுக் கொள்வது,

    எஸ்.எஸ்.ஏ.- 2 திட்டத்தின்படி மாவட்ட தலைமைக்கு அடுத்த நிலையில் உள்ள வட்டார, நகர, சர்க்கிள், பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டிகளை முற்றிலும் சீரமைக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பார்வையாளர்களை அனுப்புவது ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

    மேலும், அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் மோசடி தொடர்பாக,  பா.ஜ.க., சங்பரிவாரங்கள் மேற்கொண்ட இந்த கூட்டுக் கொள்ளை குறித்து உச்சநீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து உரிய விசாரணை நடத்த ஒன்றிய அரசை செயற்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சி காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு, 2018 உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றுக்கு எதிரானது மட்டுமல்ல, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகும். இதன்படி, தமிழகத்தின் அனுமதியில்லாமல் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம். காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுகிற முயற்சிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து குரல் கொடுக்கும், போராடும் என்பதை இக்கூட்டம் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Cauvery river karnataka Mekedatu Dam Tamil Nadu Congress Committee TNCC
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅயோத்தி ராமர் கோயிலில் நாள்தோறும் ரூ.8லட்சம் நன்கொடை திருட்டு..! வெளியான அதிர்ச்சி தகவல்..!
    Next Article தமிழகத்தில் 2,000 புதிய மின்சார ஏசி பேருந்துகள்…  எந்தெந்த நகரங்களில் இயக்கப்படும்?
    Editor TN Talks

    Related Posts

    மோகன்லாலிடம் 10 யானைத் தந்தங்கள், 13 தந்தச் சிலைகள்

    July 6, 2026

    விஜய் அரசை கவிழ்க்க திமுக சதி ; நாங்கள் காவல் அரணாக இருப்போம் – வைகோ

    July 6, 2026

    ‘பாஸ் ஸ்கேம்’ மோசடி: ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் ரூ.38.5 லட்சம் பறிக்க முயற்சி!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மோகன்லாலிடம் 10 யானைத் தந்தங்கள், 13 தந்தச் சிலைகள்

    விஜய் அரசை கவிழ்க்க திமுக சதி ; நாங்கள் காவல் அரணாக இருப்போம் – வைகோ

    ‘பாஸ் ஸ்கேம்’ மோசடி: ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் ரூ.38.5 லட்சம் பறிக்க முயற்சி!

    “கவர்ச்சி மாயையை நம்பி வாக்களித்த மக்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர்”

    நேரில் தவெக அரசுக்கு பாராட்டு; அறிக்கையில் திட்டு- அன்புமணியின் புதிர் அரசியல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.