Close Menu
    What's Hot

    CJP போராட்டம் வாபஸ்: டெல்லியில் மெட்ரோ நிலையங்களும் மீண்டும் திறப்பு!

    காவிரி விவகாரம்: ‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துங்கள்’- முதல்வர் விஜய்க்கு இ.பி.எஸ் வலியுறுத்தல்!

    3 ஐரோப்பிய நாடுகளுக்கான அரசுமுறைப் பயணம் நிறைவு: டெல்லி புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“இது சினிமா கிடையாது… ‘ரீல்’ ஹீரோ ‘ரியல்’ ஹீரோவாக மாற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்
    Featured

    “இது சினிமா கிடையாது… ‘ரீல்’ ஹீரோ ‘ரியல்’ ஹீரோவாக மாற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்

    Editor web2By Editor web2July 24, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 24 17h38m26s582
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான பிரேமலதா விஜயகாந்த், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியதுடன், விருத்தாசலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிறுநீரக பாதிப்பு அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    நீட் தேர்வு விவகாரம் குறித்து பேசிய அவர், நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் உணர்வுகளை மதித்து முடிவெடுக்க வேண்டும் என்றார். மேலும், நீட் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து கவலை தெரிவித்த அவர், அரிசி உள்ளிட்ட பொருட்களின் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா பகுதி கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், விவசாயிகளுக்கு ஆதரவாக தேமுதிக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும், இதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஒகேனக்கல்லில் போராட்டம் நடத்தப்பட உள்ளது என்றும் அறிவித்தார்.

    மேலும், இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் எல்-நினோ தாக்கத்தால் வறட்சி அபாயம் நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், விவசாயத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இறுதியாக தற்போதைய ஆட்சியின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்த பிரேமலதா, “இது சினிமா கிடையாது. ரீல் ஹீரோ ரியல் ஹீரோவாக மாற வேண்டும் என்றால் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஆட்சியின் செயல்பாட்டை மதிப்பிடுவது மக்களின் கையில்தான் உள்ளது” என்று கூறினார்.

    dmdk NEET PremalathaVijayakanth TamilNaduPolitics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடி20: தோனியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்!
    Next Article அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு அச்சம்: 5-வது நாளாக சரிந்த சென்செக்ஸ், நிஃப்டி!
    Editor web2
    • Website

    Related Posts

    CJP போராட்டம் வாபஸ்: டெல்லியில் மெட்ரோ நிலையங்களும் மீண்டும் திறப்பு!

    July 25, 2026

    காவிரி விவகாரம்: ‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துங்கள்’- முதல்வர் விஜய்க்கு இ.பி.எஸ் வலியுறுத்தல்!

    July 25, 2026

    3 ஐரோப்பிய நாடுகளுக்கான அரசுமுறைப் பயணம் நிறைவு: டெல்லி புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

    July 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    CJP போராட்டம் வாபஸ்: டெல்லியில் மெட்ரோ நிலையங்களும் மீண்டும் திறப்பு!

    காவிரி விவகாரம்: ‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துங்கள்’- முதல்வர் விஜய்க்கு இ.பி.எஸ் வலியுறுத்தல்!

    3 ஐரோப்பிய நாடுகளுக்கான அரசுமுறைப் பயணம் நிறைவு: டெல்லி புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

    பிரான்ஸ், ஸ்பெயினில் பற்றி எரியும் காட்டுத்தீ: 15 பேர் பலி; 2.70 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்!

    “இது லட்சக்கணக்கான மாணவர்களின் வெற்றி; என்னை ஹீரோ ஆக்க வேண்டாம்!”- அபிஜீத் தீப்கே!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.