Close Menu
    What's Hot

    மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானம்

    அயோத்தி ராமர் கோயிலில் நாள்தோறும் ரூ.8லட்சம் நன்கொடை திருட்டு..! வெளியான அதிர்ச்சி தகவல்..!

    மேற்கு வங்கத்தில் சூப்பர் எமெர்ஜென்சி ; திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மாதவரத்தில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த பயிற்சி கார்!. அலறிய பெண்கள்!
    Featured

    மாதவரத்தில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த பயிற்சி கார்!. அலறிய பெண்கள்!

    Editor web3By Editor web3July 6, 2026Updated:July 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    madavaram car fire
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை மாதவரம் பகுதியில் இன்று காலை ஓட்டுநர் பயிற்சி கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாதவரத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி ஒன்றில் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல இன்றும் பயிற்சி வகுப்பு நடத்த, ஜி.என்.டி. சாலையில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரி அருகே காரை ஓட்டிச் சென்றார். அவருடன் பயிற்சி பெறுவதற்காக இரண்டு பெண்கள் காரில் இருந்தனர்.

    பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, காரின் எஞ்சின் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியுள்ளது. இதைக் கவனித்த பயிற்சியாளர் சண்முகம், உடனடியாக சுதாரித்து காரை ஓரமாக நிறுத்தி, உள்ளே இருந்தவர்களைக் கீழே இறக்கினார். அவர்கள் காரை விட்டு இறங்கிச் சென்ற சில நொடிகளிலேயே, காரின் முன் பகுதியில் இருந்து தீ மளமளவெனப் பற்றி மற்ற இடங்களுக்கும் பரவியது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடித் தீயை அணைத்தனர். எனினும், தீயின் வேகம் அதிகமாக இருந்ததால், கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

    அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. இது குறித்து மாதவரம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, காரில் தீ விபத்து ஏற்படக் காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    madavaram fire training car fire Women panic
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article6 நாள்.. 3 நாடுகள்..!! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி..!!
    Next Article முக்கிய மைல்கல்.. இஸ்ரோவின் ‘ககன்யான்’ திட்டம்..!! முதல் தரைதள சோதனை வெற்றி..!!
    Editor web3
    • Website

    Related Posts

    மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானம்

    July 6, 2026

    அயோத்தி ராமர் கோயிலில் நாள்தோறும் ரூ.8லட்சம் நன்கொடை திருட்டு..! வெளியான அதிர்ச்சி தகவல்..!

    July 6, 2026

    மேற்கு வங்கத்தில் சூப்பர் எமெர்ஜென்சி ; திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம்

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானம்

    அயோத்தி ராமர் கோயிலில் நாள்தோறும் ரூ.8லட்சம் நன்கொடை திருட்டு..! வெளியான அதிர்ச்சி தகவல்..!

    மேற்கு வங்கத்தில் சூப்பர் எமெர்ஜென்சி ; திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம்

    மெக்ஸிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து!. பட்டாசு சதிக்கு மைதானத்தில் பதிலடி!

    லோக் ஆயுக்தா சட்டம்; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.