ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணமே த்ரிஷா தான் அதனால் த்ரிஷா புகைப்படத்தை காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்ட அரங்கில் வைக்க வேண்டும் என காரைக்குடி மாநகராட்சி கூட்டத்தில் மாநகராட்சி உறுப்பினர் மெய்யர் வலியுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது அப்போது அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரகாஷ் தனது வார்டில் எந்த பணியும் நடக்கவில்லை என்று கூறி தான் அளித்த மனுக்களுடன் மேயர் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

மற்ற வார்டு மாமன்ற உறுப்பினர்களும் தங்கள் பகுதியில் எந்த வேலையும் நடக்கவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடியின் புகைப்படத்தை கூட்ட அரங்கில் வைக்க வேண்டும் என்று கூறி அதிமுகவினர் முன்னாள் முதல்வர் எடப்பாடி புகைப்படத்தை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று கூறி திமுகவினர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை வைத்தார்கள். அப்பொழுது புகைப்படத்தை வைக்க முடியாமல் திமுகவினர் தவித்தனர் உடனடியாக வெளியில் இருந்து வந்த துணை மேயரின் வாகன ஓட்டுநர் புகைப்படத்தை மாட்டி கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படமும் வைக்கப்பட்டது இதைத் தொடர்ந்து மாநகராட்சி கவுன்சிலர் மெய்யர் ஆட்சி மாற்றத்திற்கு காரணம் திரிஷா தான். அதனால் அவருடைய புகைப்படத்தையும் கூட்ட அரங்கில் வைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்.

இதனால் மாமன்ற கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
