நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டுக்கு நடிகை த்ரிஷா வருகை தந்துள்ளார்.
தமிழ் சினிமா நடிகைகளில் மார்க்கண்டேயனாக இருக்கும் த்ரிஷா இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதற்காக அதிகாலையிலேயே திருப்பதி மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதன்பின்னர் சென்னை திரும்பினார்.
தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் த்ரிஷாவுடன் நெருக்கம் காட்டி வரும் நடிகர் விஜய்யின் தவெக 100 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்து வருகிறது.
இதனால் தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஜய்யின் நீலாங்கரை வீட்டுக்கு முன்பாகவும் கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனது பிறந்த நாளுக்காக வாழ்த்து பெறவும், தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து சொல்லவும் நடிகை த்ரிஷா, தனது சொகுசு காரில் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.தவெக முன்னிலை வகித்து வரும் நிலையில், நடிகை த்ரிஷாவும், விஜய்யும் ஆடிப்பாடும் உன் தங்க நிறத்துக்குத்தான் தமிழ்நாட்டை வாங்கித் தரட்டுமா என்னும் பாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருவது குறிப்பிடத் தக்கது.
