23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் டி பிரிவு லீக் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் துருக்கி அணிகள் மோதின. இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்கம் முதலே இரு அணிகளும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதன் பயனாக அமெரிக்க வீரர் ஆஸ்டன் ட்ரஸ்டி ஆட்டத்தின் 3வது நிமிடத்திலேயே ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார். 10-வது நிமிடத்தில் துருக்கி வீரர் ஆர்தா குலர் கோல் அடிக்க இரு அணிகளும் சமநிலைக்கு வந்தது.

31-வது நிமிடத்தில் மீண்டும் துருக்கி வீரர் ஓர்குன் ஒரு கோல் அடிக்க, தொடர்ந்து முயன்றும் முதல் பாதியில் அமெரிக்காவால் அடுத்த கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் துருக்கி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய அமெரிக்கா, செபாஸ்டியன் பெர்ஹால்டர் அடித்த கோலின் மூலம் ஆட்டத்தை 2-2 என சமன் செய்தது. அதன்பிறகு இரு அணிகளும் தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக மோதினர். ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் துருக்கி வீரர் கான் அய்ஹான் கோல் அடிக்க, அந்த அணி திரில் வெற்றி பெற்றது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version